புஜ்

From Wikipedia, the free encyclopedia

புஜ்
Remove ads

புஜ் (Bhuj), இந்தியா, குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின் தலைமையகம் ஆகும். புஜ் நகரத்தை மன்னர் ராவ் ஹமிர்ஜி என்பவர் 1510ஆண்டில் நிறுவினார். சுவாமி நாராயண் மரபினர் முதன்முதலில் கட்டிய சுவாமி நாராயண் கோயில் 1822இல் புஜ் நகரத்தில்தான் உள்ளது. கைவினைப் பொருட்களுக்கான பந்தினி என்ற சுங்கிடி சேலைகள் (bandhni) (tie and Dye), தோல் வேலைகளுக்கு பெயர் பெற்றது.

விரைவான உண்மைகள் புஜ், நாடு ...
Thumb
சுவாமி நாராயணன் கோயில், புஜ்
Thumb
சிந்தி மக்களின் தோல் காலணி
Remove ads

நில நடுக்கங்கள்

சூலை 21, 1956இல் புஜ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களும் சொத்துகளும் அழிந்தன[2]. மீண்டும் இந்தியக் குடியரசு நாளான டிசம்பர் 26, 2001 காலையில் 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், புஜ் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் 20,000 பேர் உயிர் இழந்தனர், 1,50,000 பேர் படுகாயம் அடைந்தனர், மேலும் பல கட்டிடங்கள் இடிந்து பெரும் பொருள் இழப்புகளையும் சந்தித்தது. [3].[4] [5]

Remove ads

போக்குவரத்து வசதிகள்

புஜ் இரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்கள், புஜ் நகரத்தை அகமதாபாத், மும்பை, காந்திநகர், புதுதில்லி, பெங்களூரு, புனே, மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. மாநில பேரூந்துகள் குஜராத் மாநிலத்தின் பிற நகரங்களுடன் இணைக்கிறது.

மக்கள் வகைப்பாடு

2008ஆம் ஆண்டு கணக்குப்படி புஜ் பகுதியின் மக்கட்தொகை 136,429. அதில் ஆண்கள் 71,056 ஆகவும், பெண்கள் 65,373 ஆக உள்ளனர். மொத்த வீடுகள் எண்ணிக்கை 27,999ஆக உள்ளது..[1]


மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், புஜ், மாதம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads