புதுக்கோட்டை அருங்காட்சியகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புதுக்கோட்டை அருங்காட்சியகம் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாநகரின் திருக்கோகர்ணத்தில் [1] 1910 ஆம் ஆண்டில் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களால் தொடங்கப்பெற்ற பழமையான அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம், தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த அருங்காட்சியகம் ஒரு காப்பாட்சியரால் நிருவகிக்கப்பெறுகின்றது. தமிழகத்தில் உள்ள அருங்காட்சியகங்களில் இரண்டாவது பெரிய அருங்காட்சியகமாக இது கருதப்படுகிறது.[2]
Remove ads
அறிமுகம்
புதுக்கோட்டை தமிழக மாவட்டங்களில் ஒன்றாகும். 1974-ஆம் ஆண்டு சனவரி 14-ஆம் நாள் மாவட்டமாக உருவாகியது. இம்மாவட்டம் தமிழ் நாட்டின் 15-ஆவது மாவட்டமாக உருவானது. தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு 03.03.1948-இல் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பெற்றது.
காட்சிப் பொருட்கள்
இந்த அருங்காட்சியகத்தில் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் குறித்த செப்பேடுகள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், கல்வெட்டுகள், கல் சிலைகள், கனிமங்கள், மரப் படிமங்கள், உலர் தாவரங்கள், மூலிகைப்பொருட்கள், கூத்து கலைப்பொருட்கள், பனையோலைகள்,அருங்காட்சியக வெளியீடுகள், உலோகப் படிமங்கள், கலைப்பொருட்கள், தொல் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், முதுமக்கள் பானைகள், சுடுமண் படிமங்கள், மாந்த உடல் மாதிரிகள், கல் வகைகள், தொல்லுயிரிப் படிமங்கள், கனிமங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பெற்று உள்ளன.[3]
- முதலையின் பதன உடலம்
- பீரங்கிகள்
- தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads