புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில்

புதுச்சேரியில் அமைந்துள்ள இந்துக்கோவில் From Wikipedia, the free encyclopedia

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில்
Remove ads

மணக்குள விநாயகர் கோவில் (Manakula Vinayagar Temple) புதுச்சேரியில் அமைந்துள்ளது. இக்கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது என்றறியப்படுகிறது. புதுச்சேரியின் சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. புகழ் பெற்ற விநாயகர் கோயில்களில் குறிப்பிடத்தக்கதும் ஆகும்.[1] கோவிலின் உட்பகுதின் மேற்கூரையில் விநாயகர் பற்றிய பல வண்ண படங்கள் வரையப்பட்டு காண்பவரை அளவில்லா இன்பத்தில் ஆழ்த்தும் .கோவில் சுற்றுபுற சுவர்களில் அதைபோல் பல வண்ண படங்கள் வரையப்பட்டு உள்ளது.

Thumb
கோயிலின் நுழைவாயில்
Remove ads

அமைவிடம்

புதுவை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது .
புதுவை ரயில் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது .

தரிசனம் நேரம்

காலை 5.45 முதல் 12.30 மணி வரை.
மாலை 4.00 முதல் 09,30 மணி வரை.
நேரம் விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மாற்ற உட்பட்டவை

தங்க தேர்

தங்க தேர் பக்தர்கள் நன்கொடைகள் சேகரிப்பு அடிப்படையில் முற்றிலும் செய்யப்பட்டது.இந்த தேர் பயன்படுத்தப்படும் தங்கம் மொத்த எடை சுமார் 7.5 கிலோ மதிப்பீடு ரூபாய் 35 லட்சம் மூலம் ஆகும்.தேரின் உயரம் 10 அடி அகலம் 6 அடி ஆகும்.மணக்குள விநாயகர் கோவில் தங்க தேர் 2006ஆம் ஆண்டு உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது . இந்த தங்க தேர் பவனி ஒவ்வொருஆண்டும் விஜய தசமி அன்று மேல தாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்ல படும்.கடந்த ஆண்டு(2011) வரை கோவில் யானை லட்சுமி திருதேருடன் சேர்ந்து ஊர்வலம் வந்தன. மணக்குள விநாயகர் வீதியில் ஆரம்பித்து நேரு வீதி வழியாக வந்து ராஜா சினிமா தியேட்டர் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னல் வழியாக வந்து கொசகடை வீதி சென்று அங்கு இருந்து கோவிலை வந்து அடைகிறது.[2]

கோவில் யானை லட்சுமி

மணக்குள விநாயகர் கோவிலில் கோவில் யானை ஒன்று உள்ளது .அதன் பெயர் லட்சுமி .இந்த யானை மற்ற கோவில் யானைகள் போல் அல்லாது மக்களுடன் மிகவும் அன்புடன் பழகி வருகிறது .லட்சுமி யானை புதுவை மக்களால் பெரிதும் பேரன்புடன் கண்டு செல்ல கூடிய ஒரு நிலை இன்று உள்ளது .மணக்குள விநாயகர் கோவில் நுழைவாயில் முன் லட்சமி நின்று கொண்டு வரும் பக்தர்களை வரவேற்பதை நாம் இன்றும் காண முடியும் .பல குழந்தைகள் லட்சமி கன்வதற்காக இங்கு வருகின்றனர் .அக்டோபர் 2013 முதல் புதுவை முனிசிபாலிட்டி யானை உரிமம் கொடுக்கப்பட்டு உள்ளது அதற்கான சான்று அதன் கழுத்தில் செப்பு பதக்கத்தில் பொறிக்கப்பட்ட ஒரு அபாரனமாக அதை காணலாம்.[3]

Remove ads

தொள்ளைக்காது சித்தர்

தொள்ளைக்காது சுவாமிகளின் –இயற் பெயர் என்ன -தாய் தந்தையர் யார் எப்பொழுது பிறந்தார்-எங்கிருந்து வந்தார் என்பது யாருக்கும் தெரியாது. புதுவை, கோரிமேடு அடுத்துள்ள முரட்டாண்டி என்னும் ஊரிலுள்ள அம்மன் கோவிலில் தான் ஊர் மக்கள் பார்த்தார்களாம்.

இள வயதிலேயே தந்தையை இழந்த சுவாமிகள், தாயார் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டு மிரண்டு போய் தன் குலதெய்வமான அம்மனிடம் முறையிட்டார். அப்பொழுது அம்மன் தன்னை அழைப்பது போன்று ஒர் ஒலி கேட்க, அந்த ஒலியை கேட்டுக் கொண்டே நடக்கத் தொடங்கியவர் ”முரட்டாண்டி” என்ற ஊரை அடைந்தவுடன் தான் தன் நிலை அடைந்தார். அங்கிருந்த முத்து மாரியம்மன் கோவிலை அடைந்து அம்மனை வேண்டினார்.இடைவிடாது தாயை வணங்கிக் கொண்டேயிருந்தார். அதி அற்புத அழகு வாய்ந்த அன்னையின் தரிசனக் காட்சியை- அன்றிரவு கண்ணாரக்கண்டார். வாய் பேசா ஊமையானார்.

ஞான மோன நிலைக்குள் தன்னை நிறுத்திக் கொண்டு –யாவற்றையும் உணர்ந்தார். அங்கு சுவாமிகளுக்கு ஞானம் கிடைத்தது. அத்துடன் அங்கிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள புதுவைக்குச் சென்று-

கடற்கரை அருகில் இருந்த மணற் குளத்தங்கரையில் ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து அவ்விநாயகரையும் வழிபட்டு வந்தார். தினமும் காலையில் ஐந்து மைல்கல் நடந்து புதுவையை அடைந்து, அங்கு விநாயகருக்கு மலர் அலங்காரம் செய்து- பூஜை செய்து வழிபட்டுவிட்டு –பின் அங்கிருந்து திரும்பவும் நடந்து முரட்டாண்டிக்கு வந்து அம்மனை வழிபட்டு வந்துள்ளார். இது அவரின் தினசரி வாடிக்கையானது.

முரட்டாண்டியில் பிரஞ்சு அதிகாரிகளின் தொல்லைகள் அதிகமானதால் சுவாமிகள் அவ்விடம் விட்டு நகர்ந்து புதுவை பாலாஜி திரையரங்கு அருகில் உள்ள ஆனந்தரங்கபிள்ளையின் தோட்டத்திற்கு வந்து ஒரு பகுதியில் சிறு குடிசை அமைத்துக் கொண்டு தங்கினார். மனித கூட்டத்தை விட்டு விலகி தனிமையை விரும்பிய

சுவாமிகளுக்கு-அந்த இடம், அவர் மனதில் அமைதியை தோற்றுவித்தது. ஞான பூமியிலே, சித்தர்கள்,தவசீலர்கள், ஆத்ம சாதனையாளர்கள் தேடும் பேரின்பம் ஒளிரக்கண்டார். தன்னை இப்புதுவைக்கு அழைத்து வந்த அந்த ஓங்கார ஒலியை வணங்கினார். தான் புதுவைக்கு அழைத்து வரப்பட்ட நோக்கத்தை உணர்ந்து கொண்டார்.

அங்கிருந்து மணற் குளத்து பிள்ளையாரை தினமும் இரு வேளையும் வழிபட செல்ல

சுவாமிகளுக்கு மிகவும் வசதியாய் அமைந்தது. பிள்ளைத்தோட்டத்து பகுதி மக்கள் சுவாமிகளின் மேல் மிகவும் அன்பாயிருந்து பணிவிடை செய்து வந்தனர். காலையில் விநாயகரை பூஜை செய்வது வழக்கம்.பின் முத்து மாரியம்மனிடம் நிஷ்டையில் அமர்வார்.பின் மொரட்டாண்டி செல்வார். இவ்வளவும் நடந்தே சென்று முடிப்பார்.காலங்கள் சென்றன.ஆத்ம சக்தி தீவிரமாக வெளிப்படத் தொடங்கியது.தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்ததுடன் அவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைத்துள்ளார். அவரின் சித்து வேலைகளைக் கண்ட மக்கள் சுவாமிகளின் குடிசையை “சித்தன் குடிசை” என்றுஅழைத்து வந்தனர். இன்றளவும் அப்பகுதி அப்பெயரிலேயே அழைக்கபடுகிறது. அவரின் அருளால் அப்பெயர் மக்கள் மனதில் நிலைத்து விட்டது. சுவாமிகள், காதில் பெரிய துளை இருந்ததால் பின்னர் அவர் “தொள்ளைக் காது சித்தர்”என அழைக்கப் பெற்றார்.

Remove ads

நூல்களில் கோயில் பற்றிய குறிப்புகள்

  • புதுவை நெல்லித்தோப்பு ராமானுஜ செட்டியார் அவர்கள் ஸ்ரீ மணக்குள விநாயகர் பதிகம் எழுதி நூலாக வெளியிட்டார் .

படங்கள்

Remove ads

மேற்கோள்கள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads