புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புன்னைநல்லூர் முத்து மாரியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், மாரியம்மன்கோயில் ஊராட்சியில் புன்னைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு முத்துமாரியம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார்.
Remove ads
தேவஸ்தான கோயில்
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1][2]
பிற சன்னதிகள்
முத்துமாரியம்மன் சன்னதி அருகில், துர்க்கை அம்மனுக்குத் தனி சன்னதி உள்ளது. இரு அம்மன்களும், அருகருகே எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பு. அம்பாள் சன்னதியின் வலப்புறம் பேச்சியம்மன் சன்னதி உள்ளது. கோயிலின் உள்ளே ஒரு குளமும், வெளியே ஒரு குளமும் உள்ளன.
கோயில் உருவாக்கம்
சிறு கோயிலுள் குடிகொண்டிருந்த முத்துமாரியம்மனுக்கு, சோழர் காலத்தில் சோழ மன்னர்களால் சிறிய கோவிலாக அமைக்கப்பட்டது. பின்னர் மராட்டிய மன்னர்களால் மூலஸ்தான கோபுரம் மற்றும் ராஜகோபுரத்துடன் பிரம்மாண்ட கோவில் எழுப்பப்பட்டது. தற்போது இக்கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ளது. சூலை 2014இல் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இக்கோயிலுக்கு வருகை தந்து முத்துமாரியம்மனையும், துர்கையையும் வழிபட்டுச் சென்றார்.[3][4][5]
வழிபாட்டு முறைகள்
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மாவிளக்கு எடுப்பது, உப்பு, மிளகு இடுவதும், வேப்பஞ்சேலையை உடுத்தி, அக்கினி சட்டி எடுப்பதும், கோயில் தீர்த்தமான வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கி போடுவதும் பக்தர்களால் செய்யப்படுகின்றது. மேலும் பக்தர்கள் நோய்களுக்கு, புற்று மண்ணை பிரசாதமாகக் வழங்கப்படுகின்றது.[6]
குடமுழுக்கு
பொ.ஊ. 1727 முதல் 1735 வரை தஞ்சாவூரை ஆண்ட துளஜா மகாராஜாவினால் சிறிய அளவில் கோயில் கட்டப்பட்டது. பொ.ஊ. 1798 முதல் 1832 வரை ஆண்ட இரண்டாம் சரபோஜி மகாமண்டபம், நர்த்தன மண்டபம், முன் கோபுரம், பெரிய இரண்டாவது திருச்சுற்று முதலியவற்றைக் கட்டி கும்பாபிஷேகம் செய்தார்.1950இல் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 6.7.1987இல் குடமுழுக்கு நடைபெற்றது.[7] இறுதியாக 27.06.2004இல் குடமுழக்கு நடத்தப்பட்டது . அதனை தொடர்ந்து சுமார் 21 ஆண்டுகள் கழித்து 10-02-2025 அன்று குடமுழக்கு நடைபெற்றது.[8]
Remove ads
விழாக்கள்
- ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிகிழமை அம்மனுக்கு பூச்சோரிதல் விழா நடைபெறும்.
- ஆடி கடை ஞாயிற்றுக்கிழமை முத்துப்பல்லக்கு பெருவிழா நடைபெறும்.
- ஆவணி மாதம் தேரேட்டம் நடைபெறும்.
- புரட்டாசி மாதம் தேப்பம் விழா நடைபெறும்.
அருகிலுள்ள கோயில்
படத்தொகுப்பு
- கோயில் நுழைவாயில்
- கோயில் வளைவு
- மூலவர் விமானம்
- உள் மண்டபம்
- உள் மண்டபம்
- கோயில் குளம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads