புவியின் கட்டமைப்பு

From Wikipedia, the free encyclopedia

புவியின் கட்டமைப்பு
Remove ads

புவி கட்டமைப்பு நான்கு அடுக்குகளை கொண்டதாக உள்ளது. அவை உட் கருவகம், வெளிக்கருவகம், மூடகம் மற்றும் மேலோடு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக மேலோடு சிலிகேட், கால்சியம் போன்ற தனிமங்களால் ஆனது, மூடகத்தில் இரும்பு, சிலிகான், மெக்னிசியம் ஆகிய கூட்டுப் பொருட்களை உள்ளடக்கிய இது திட நிலையிலிருந்து குழம்பு நிலைக்கு மாறும் தன்மை கொண்டது.

Thumb
புவியின் வெட்டுத்தோற்றம்

திணிவு

புவியீர்ப்பினால் ஏற்படுத்தப்படும் விசையைப் பயன்படுத்தி அதன் திணிவு கணிக்க முடியும். வானியலாளர்கள் புவியின் ஒழுக்கில் சுற்றும் செயற்கைக் கோள்களின் இயக்கத்தை அவதானித்து புவியின் திணிவை கணிப்பர். புவியின் சராசரி அடர்த்தி எடையறி பரிசோதனைகள் மூலம் ஊசல்களைக் கொண்டு கணிக்கப்படும்.

புவியின் திணிவு 6×1024 kg.[1]

கட்டமைப்பு

புவியின் கட்டமைப்பு இரண்டு வழிகளில் விளக்கப்படும்: இன்று அதன் பொறிமுறை பாய்மவியலின் அடிப்படையில். மற்றையது வேதியியல் கட்டமைப்பின் அடிப்படையில். பொறிமுறை பாய்மவியலின் அடிப்படையில் கற்கோளம், மென்பாறைக் கோளம், மத்திய படை, மற்றும் உள்ளகணி. வேதியியலின் அடிப்படையில் உள்ளகணி, வெளியகணி, மூடகம் மற்றும் மேலோடு என்பனவாகும். புவியின் நிலவியல் கூறுகள் பின்வரும் அழங்களில் அமையும் [2]:

மேலதிகத் தகவல்கள் ஆழம், அடுக்கு ...

புவியோடு

புவியின் ஓடு புவி மேற்பரப்பிலிருந்து 5–70 கிலோமீட்டர்கள் (3.1–43.5 mi) வரையான ஆழம் வரைக் காணப்படும். இதுவே மிகவும் வெளியில் காணப்படும் ஓடு ஆகும். புவியோட்டின் தடிப்புக் குறைந்த பகுதி பெருங்கடல் படுக்கைகளில் (5–10 km) காணப்படும். இது பெருங்கடல் புவியோடு எனப்படும். இங்கு மக்னீசியம் (mg)சிலிக்கேற்று(si) முதலானவற்றால் ஆன தீப்பாறைகளால் ஆனவை. 🌎 தடித்த பகுதி கண்ட ஓடு எனப்படும். Tஇது பொற்றாச்சியம் சோடியம் அலுமினியம் சிலிக்கேற்றுக்களால் ஆனது. புவியோட்டின் பாறைகள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படும் – அவை புவிப்புறணி (sial) மற்றும் புவி அகவணி(sima) (Suess,1831–1914). மூடகத்தின் மேற்பகுதியும் புவியோடும் சேர்ந்த பகுதி கற்கோளம் ஆகும்.

மூடகம்

Thumb
World map showing the position of the Moho.

புவியின் மூடகம் 2,890 km,ஆழமானது.இதுவே புவியில் மிகத்தடிப்பான பகுதி ஆகும். இது மேல் மூடகம், கீழ் மூடகம் என இரண்டு வகைப்படும்.இந்த மேல் கீழ் பகுதிகள் ஒரு இடைப் பகுதியால் வேறு படுத்தப்படும். மூடகத்தின் கீழ்ப்பகுதியான அகணியின் எல்லை D″ (pronounced dee-double-prime[3]) வலயம் என அழைக்கப்படும். மூடகத்தின் கீழ்ப்பகுதியில் அமுக்கம் ≈140 பஸ்கால்|Pa (1.4 atm).

மூடகம் சிலிக்கேற்றுப் பாறைகளால் ஆனது. இரும்பு, மக்னீசியத்தை அதிக அளவு கொண்டது.இது திண்மநிலையில் காணப்பட்ட போதிலும் அதி வெப்பநிலையில் குழம்பு நிலையிலான பாறைகள் நீண்ட கால அடிப்படையில் நகர்வினைக் காட்டும். மூடகத்தின் பாய்மப் பரவல் புவித்தட்டுக்களின் நகர்வின் பொது வெளிக்காட்டப்படும். அமுக்க அதிகரிப்பும் செய்யிவும் காரணமாக,மூடகத்தின் கீழ்ப்பகுதியை விட மேல்பகுதி இலகுவாக நகர இடமளிக்கும்.மூடகத்தின் பாகுத்தன்மை 1021 மற்றும் 1024 Pa·s,இடையில் ஆழத்தைப் பொறுத்து வேறுபடும்.[4]

அகணி

புவியின் சராசரி அடர்த்தி 5,515 கன கிலோமீட்டர்(kg/m3). புவி மேற்பரப்பிலுள்ள பொருட்களின் அடர்த்தி 3,000 kg/m3, ஆகவே அடர்த்தி அதிகம் கூடிய பாகங்கள் அகணியின் உள்ளேயே அமைந்துள்ளன. புவியதிர்ச்சி அளவீடுகள் அகணி இரு வகைப் படும் எனக் காட்டுகின்றன ≈1,220 km ஆரை கொண்ட உட்புற அகணி[5] மற்றும் ≈3,400 km ஆரை கொண்ட திரவ வெளிப்புற அகணி. இவற்றின் அடர்த்திகள் 9,900 முதல் 12,200 kg/m3 வெளி அகணியிலும் 12,60013,000 kg/m3 உள் அகணியிலும் காணப்படும்.[6]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads