புவி சூடாதல் தொடர்பாக அரசுகளுக்கிடையேயான குழு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழ (Intergovernmental Panel on Climate Change (IPCC) புவி சூடாதல் குறித்து பன்னாட்டு அரசுகளுக்கு விரிவான அறிக்கையை உருவாக்கி வழங்கி வழிகாட்டும் குழுவாகும். பருவநிலை மாற்றம் பற்றிய மதிப்பீடு, அதன் தாக்கம், தீர்வுகளைப் பற்றி 6-7 ஆண்டுகளுக்கு ஒரு முறை பன்னாட்டு அரசுகளுக்கு அறிக்கை அளிப்பதற்காக, 1988-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் சார்பாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.[1][2][ இக்குழுவில் அனைத்துத் துறை அறிவியல் அறிஞர்கள் மற்றும் 195 நாடுகளின பிரதிதிநிகள் உள்ளனர்.பல்துறை கல்விப்புல ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து இக்குழு அறிக்கைகளை கோரிப் பெறுகிறது. இக்குழு 6 அல்லது 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை அளிக்கும் வழக்கமான அறிக்கைகள் தவிர பருவநிலை மாற்றம் தொடர்பான அறிவியல் கேள்விகளைப் பற்றி சிறப்பு அறிக்கைகளையும் இந்த அமைப்பு வழங்குகிறது.[3][4]
1950-ஆம் ஆண்டிலிருந்து புவி வெப்பமடைவதற்கு மனிதர்களே முக்கியக் காரணம் என்று 2013-ஆம் ஆண்டில் இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை முக்கியத்துவம் பெற்றது. இக்குழுவின் அறிக்கையின் படி 2015-ஆம் ஆண்டில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம்[5] ஏற்பட்டது.
தொழிற்புரட்சிக்கு முந்திய காலத்தை ஒப்பிட, த்ற்போதைய புவியின் வெப்ப நிலை 1.5 டிகிரிக்கு மேல் உயரக்கூடாது என்ற மிக முக்கியமான அறிக்கையை 2018-ஆம் ஆண்டில் இக்குழு வெளியிட்டது. அரசியல் தலைவர்கள் பருவநிலை மாற்றத்துக்கு உரிய முறையில் முகம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி உலகம் முழுவதும் இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் செய்வதற்கு இக்குழுவின் அறிக்கையே மிகமுக்கியமான உந்துவிசையாக இருந்தது. புவி சூடாதல் எதிர்காலப் பிர்ச்சனை அல்ல: தற்கால அபாயம் என இதன் அறிக்கை உணர்த்தியது.
இக்குழு தாமாக பருவ நிலைமாற்றம் குறித்து ஆய்வு செய்வதில்லை. இக்குழு மூன்று வெவ்வேறு பிரிவுகளில் ஐபிசிசி அறிக்கை தயாரிக்கிறது. முதல் அறிக்கை இயல் அறிவியல் அறிக்கை ஆகும். இரண்டாவது தாக்கம் தொடர்பான அறிக்கை. மூன்றாவது அறிக்கை, தீர்வுகள் தொடர்பான அறிக்கை. தாக்கம், தீர்வுகள் தொடர்பான அறிக்கைகள் அடுத்த 2022-ஆம் ஆண்டில் வெளியாகும். மூன்று அறிக்கைகளையும் இணைத்து அளிக்கப்படும் அறிக்கையும் அடுத்த ஆண்டு 2022-இல் வெளியாகும். 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வெளியாகப்போகும் இயல் அறிவியல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் 200 அற்வியல் அறிஞர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் ஏற்கெனவே எழுதப்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் புகழ்பெற்ற அறிவியல் இதழ்களில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்து, அதில் இருந்து அறிக்கையை உருவாக்குகிறார்கள். இதன் வரைவு அறிக்கை 40 பக்கங்களில் இருக்கும்.
தொழிற்புரட்சிக்கு முந்திய நிலையை ஒப்பிடும்போது புவியின் சராசரி வெப்ப நிலை 1.5 டிகிரியை தாண்டக்கூடாது என்று ஐபிசிசி வாதிட்டுவருகிறது. கடந்த ஆண்டு (2020) புவியின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருந்தது. அதற்கு ஏற்பவே 2021-ஆம் ஆண்டில் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா தவிர பிற கண்டங்களில் தீவிர இயற்கைப் பேரிடர்கள் பதிவாகி வருகிறது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads