பூச்சியபாதர்

From Wikipedia, the free encyclopedia

பூச்சியபாதர்
Remove ads

ஆச்சாரிய பூச்சியபாதர் அல்லது பூச்சியபாதர் (பொ.ஊ. 464–524)[1] என்பவர் திகம்பர சமணப் பிரிவின் புகழ்பெற்ற இலக்கண அறிஞரும் ஆச்சாரியரும் (மெய்யியல் அறிஞர்) ஆவார். இவரது பரந்த புலமை மற்றும் ஆழ்ந்த பக்தி என்பவற்றின் விளைவாகக் கடவுளரால் வணங்கப்பட்டதாக நம்பப்படுவதால், இவர் பூச்சியபாதர் என அழைக்கப்படுகிறார். இவர் மேலைக் கங்க அரசின் மன்னனான துர்விநிதனின் குருவாக விளங்கினார்.[2]

விரைவான உண்மைகள் ஆச்சாரிய சிறீ 108பூச்சியபாதர் சி மகராசு, சுய தரவுகள் ...
Remove ads

வாழ்வு

பூச்சியபாதர் பொ.ஊ. ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் சிறந்து விளங்கினார்.[3] இவர் பொ.ஊ. 510 இலிருந்து பொ.ஊ. 600 வரை வாழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.[4] திகம்பர சமணத் துறவியான பின்னர் இவருக்கு தேவநந்தி எனும் பெயர் வழங்கப்பட்டது. சுவர்க்கத்திலிருந்து தேவர்கள் வருகை புரிந்து இவரது பாதங்களுக்குப் பூசை செய்தமையால் பூச்சியபாதர் எனும் பெயர் பெற்றார்.[5] இவருக்கு முன்னிருந்த ஆச்சாரிய குந்தகுந்தர் மற்றும் ஆச்சாரிய சமந்தபத்திரர் போன்றோரின் படைப்புக்களால் பெரிதும் தாக்கம் பெற்றார். இவர் முற்காலச் சமண இலக்கியத் துறை அறிஞர்களில் மிகச்சிறந்தவராகக் கருதப்படுகிறார்.[6] இவர் ஒரு குறைவற்ற சமயத் தலைமை மரபையும் அகநிலை வரன்முறையையும் கொண்ட முக்கிய நல்வழிப்படுத்துபவராவார். இவர் ஒரு தலைசிறந்த யோகியும், உயரிய அகநிலை உணர்வாளரும், சிறந்த புலவரும், குறிப்பிடத் தகுந்த அறிஞரும், சிறந்த எழுத்தாளரும் பல்வேறு அறிவுத் துறைகளில் சிறந்தவருமாவார்.[7] இவர் சமக்கிருதத்தில் பா வகை மற்றும் உரைநடை இலக்கியங்களை எழுதியுள்ளார்.[8] இவர் ஆச்சாரிய குந்தகுந்தரின் வழிமரபின் பகுதியாகிய நந்தி சங்கத்தின் சமயத் தலைவராய் இருந்தார். இவர் நந்தி சங்கத்தின் சமயத் தலைமை வழிமரபின் பத்தாவது குருவாவார். இவர் கர்நாடகத்தில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.[4] மாதவ பட்டரும் சிறீதேவியும் இவரது பெற்றோராவர்.[9]

சமயம் தொடர்பில் மட்டுமன்றி சமயம் சாராத துறைகளான ஆயுர்வேதம் மற்றும் சமக்கிருத இலக்கணம் போன்ற துறைகளில் எழுதிய முதல் சமணத் துறவி இவராயிருக்காலாமெனக் கருதப் படுகிறது. ஆச்சாரிய பூச்சியபாதர் சமணத்தின் ஆழ்ந்த புலமை மிக அறிஞரும் சினர்களின் வழித்தடத்தைப் பின்பற்றுகின்ற சிறந்த துறவியுமாவார். மேலும், இவர் ஒரு இலக்கண அறிஞரும்,[3] சமக்கிருதப் பாடல்கள் மற்றும் ஆயுர்வேதத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவருமாவார்.[சான்று தேவை]

சர்வார்த்தசித்தியில், இருவரும் நன்மை பெறும் வகையில் ஒருவர் தனது செல்வத்தை இன்னொருவருக்கு வழங்குதலே தான (ஈகை) எனப் பூச்சியபாதர் வரையறை செய்துள்ளார்.[10]

Remove ads

படைப்புகள்

Thumb
இசுதோபதேசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பொன்றின் நூல் முன்னட்டை
  • இசுதோபதேசம் (இறைநிலைப் பிரசங்கங்கள்) – 51 வரிகளடங்கிய சுருக்கப் படைப்பு.[11] இப் படைப்பு எமது நாளாந்த வாழ்விலிருந்து எடுத்துக்காட்டுக்களைப் பயன்படுத்தி வாழ்வின் உண்மையான மற்றும் அறம் சார்ந்த நடத்தைகள் பற்றி விளக்குகிறது.
  • சர்வார்த்தசித்தி (உயர் இலக்குகளை அடைதல்.) - சர்வார்த்தசித்தி என்பதுதத்துவார்த்த சூத்திரத்தின் உரையாகும். இது மிகவும் துல்லியத் தன்மை வாய்ந்ததும் சுருக்கமானதுமாகும்.[3][11][5]
  • சைனேந்திர வியாகரணம் (சைனேந்திர இலக்கணம்)
  • சமாதிதந்திரம் (தியான முறை))
  • தசபக்தியாதிசங்கிரகம் (பத்துப் போற்றிப் பாடல்களின் தொகுப்பு) - ஒரு உயிர் உயர்நிலையடைய உதவும் அடிப்படைகளைப் பற்றிய பற்றிப் பாடல் தொகுப்பு. உயருயிரிகள், புனித நூல்கள், நன்னடத்தை மற்றும் நந்தீசுவரதுவீபம் போன்ற புனிதமிக்க இடங்கள் ஆகியவை இவ்வடிப்படைகளுள் உள்ளடங்கும்.[12]
  • சாந்தியாட்டகம் (சாந்திநாதரைப் போற்றும் பாடல் தொகுப்பு) - 16வது தீர்த்தங்கரரான சாந்திநாதரைப் போற்றும் 8 வரிகளிலான பா.[12]
  • சப்தாவதாரண்ணியாசம் (சொற்கள் மற்றும் அவற்றின் வடிவங்களின் ஒழுங்கு) - சமக்கிருத இலக்கணம் பற்றிய படைப்பு. பாணினி பற்றிய விளக்கவுரை எனக் கூறப்படுகிறது.
  • சைனாபிசேகம் (சமணத் திருமுழுக்கு) - சமணச் சடங்குகள் பற்றிய படைப்பு.
  • சண்டசாத்திரம் (யாப்பு தொடர்பான ஆய்வுக் கட்டுரை) - சமக்கிருத யாப்பிலக்கணம் பற்றிய படைப்பு.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads