பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெங்களூரு மெட்ரோபாலிட்டன் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (BMTC) என்பது, இந்தியாவிலுள்ள பெங்களூரு நகரத்தில் பொதுத்துறை போக்குவரத்து பேருந்து சேவையை இயக்கும் அமைப்பாகும். இந்தியாவில் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் முதன்முதலில் வோல்வோ B7RLE நகர பேருந்துகளை இயக்கியது இதன் குறிப்பிடத்தக்க சாதனையாகும். 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இதை இயக்கியது[1][2][3]. 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி இதன் முதல் ஆண்டு விழாவை கொண்டாடும்போது, கர்நாடக அரசும் பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகமும் இணைந்து அடல் சரிகே என்ற ஏழை மக்களுக்கான பேருந்து சேவையை அறிமுகப்படுத்தின. இந்த பேருந்து வசதியானது பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்கள் அருகிலுள்ள பெரிய பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கான குறைந்த கட்டண இணைப்பாக இயங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.[4][5]
Remove ads
குறிப்புதவிகள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads