பெங்கித் சுட்டிராம்கிரன்
டென்மார்க் வானியலாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெங்கித் ஜார்ஜ் டேனியல் சுட்டிராம்கிரன் (Bengt Georg Daniel Strömgren) (21 ஜனவரி 1908 – 4 ஜூலை 1987) ஒரு டேனிழ்சிய வானியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார்.[1]
பெங்கித் சுட்டிராம்கிரன் கோத்தென்பர்கில் பிறந்தார். இவரது பெற்றோர் எட்விக் சுட்டிராம்கிரனும் எலிசு சுட்டிராம்கிரனும் ஆவர். எலிசு சுட்டிராம்கிரன் கோப்பெனேகன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். இவர் கோப்பெனேகன் பலகலைக்கழக வான்காணக இயக்குநராகவும் விளங்கினார். பெங்கித் அறிவியலாளர்களும் நோக்கீட்டாளர்களும் அவர்களது விருந்தினர்களும் புடைசூழ இருந்த பேராசிரியர் மாளிகையில் அறிவியல் சூழலில் வளர்ந்தார். இவர் தன் 14 ஆம் அகவையிலேயே ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதி வெளியிட்டார். இவர் 1925 இல் தன் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்து கோப்பெனேகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இரண்டாண்டுகளிலேயே இவர் வானியலிலும் வானியற்பியலிலும் பட்டம் பெற்றார். அடுத்த இரண்டாண்டுகளில் முனைவர் பட்டமும் பெற்றார். இவரது ஆய்வு 1929 இல் மிகச் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றது. அப்போது இவரது அகவை 21.
Remove ads
தகைமைகள்
விருதுகள்
- புரூசு பதக்கம் (1959)
- அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1962)
- என்றி நோரிசு இரசல் விவுரைத்தகைமை (1965)
- ஜான்சன் பதக்கம், பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகம் (1967)
- கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம் (1969)
இவரது பெயரால் வழங்குபவை
- குறுங்கோள் 1846 பெங்கித்
- சுட்டிராம்கிரன் அகவை
- சுட்டிராம்கிரன் ஒளியளவியல்
- சுட்டிராம்கிரன் கோளங்கள்
- சுட்டிராம்கிரன் தொகையம்
மேற்கோள்கள்
தகவல் வாயில்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads