பெஞ்சமின் கிரகாம்

From Wikipedia, the free encyclopedia

பெஞ்சமின் கிரகாம்
Remove ads

பெஞ்சமின் கிரகாம் (Benjamin Graham, மே 8, 1894 - செப்டம்பர் 21, 1976) பிரித்தானியாவில் பிறந்த ஒரு அமெரிக்கப் பொருளியல் நிபுணர் மற்றும் தொழில்முறை முதலீட்டாளர் ஆவார். மதிப்பு சார்ந்த முதலீடு (Value Investing) என்கிற கருத்தாக்கத்தை கொணர்ந்த முதல் நபராக இவர் கருதப்படுகிறார். 1928-ம் ஆண்டு கிரகாம் இந்த மதிப்பு சார்ந்த முதலீடு என்பது குறித்து கொலம்பியா வர்த்தகப் பள்ளியில் போதிக்கத் துவங்கினார். அதற்குப்பின் இந்த கோட்பாடு செக்யூரிட்டி அனாலிசிஸ் (Security Analysis) என்கிற புத்தகத்தின் பல்வேறு பதிப்புகள் வாயிலாக டேவிட் டோட் மற்றும் பெஞ்சமின் கிரகாம்-ஆல் மேலும் சீராக்கப்பட்டது. வாரன் பஃபெட், வில்லியம் ஜே. ருவனே, இர்விங் காஃன், வால்டேர் ஜே. ஸ்காலஸ் போன்ற உலகின் குறிப்பிடத்தக்க முதலீட்டாளர்கள் பலரும் கிராமின் வழியைப் பின்பற்றி வருகிறார்கள். வாரன் பஃபெட் தனது தந்தைக்குப் பிறகு கிரகாம் தான் தன் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்திய நபர் என்று குறிப்பிடுகிறார். கிரகாம் தனது மாணவர்கள் பஃபெட் மற்றும் காஃன் ஆகியோர் மீது கொண்டிருந்த பெரு மதிப்பின் காரணமாக தனது இரு மகன்களுக்கும் ஹோவர்டு கிரகாம் பஃபெட் மற்றும் தாமஸ் கிரகாம் காஃன் என்று பெயரிட்டுள்ளார்.[1][2][3]

விரைவான உண்மைகள் பிறப்பு, இறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads