பெண்ணிய இயக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெண்ணிய இயக்கம் ( Feminist movement பெண்கள் இயக்கம் அல்லது பெண்ணியம் என்றும் அழைக்கப்படுகிறது ) என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவமின்மையால் உருவாக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைகளை சீர்திருத்தம் செய்யும் நோக்கில் நடைபெற்ற தொடர்ச்சியான சமூக இயக்கங்கள் மற்றும் அரசியல் பிரச்சாரங்களைக் குறிக்கிறது. [1] பெண்களின் விடுதலை, இனப்பெருக்க உரிமைகள், குடும்ப வன்முறை, மகப்பேறு விடுப்பு, சம ஊதியம், பெண்களின் வாக்குரிமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறை போன்ற பிரச்சினைகள் ஆகியன இதில் அடங்கும். 1800 களில் இந்த இயக்கம் தொடங்கியதிலிருந்து தற்போது வரை பல உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டு வந்திருக்கிறது, நாடுகள் மற்றும் சமூகங்களிடையே இந்த இயக்கங்களின் நடவடிக்கைகள் வேறுபடுகின்றன. ஒரு நாட்டில் பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கு எதிர்ப்பு, மற்றொரு நாட்டில் கண்ணாடி உச்சவரம்புக்கு எதிர்ப்பு போன்ற ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ற வகையில் முன்னுரிமைகள் மாறுபடுகின்றன.
மேற்கத்திய உலகின் சில பகுதிகளில் பெண்ணியம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஒரு தொடர்ச்சியான இயக்கமாக இருந்து வருகிறது. பெண்ணிய அலை எனும் பெயரில் தொடர்ச்சியாக சீர்திருந்த்த நடவடிககளில் ஈடுபட்டு வருகிறது. முதல்-அலை பெண்ணியம் நடுத்தர அல்லது உயர்- நடுத்தர வகுப்பு பெண்களின் உரிமைகளை மையமாகக் கொண்டது மற்றும் வாக்குரிமை மற்றும் அரசியல் சமத்துவம், கல்வி, சொத்துரிமை, நிறுவன தலைமை மற்றும் திருமண சுதந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது. [2] இரண்டாம் அலை பெண்ணியம் சமூக மற்றும் கலாச்சார ஏற்றத்தாழ்வுகளை மேலும் எதிர்க்க முயன்றது. பெண்ணியத்தின் முதல் அலை முக்கியமாக நடுத்தர வர்க்க வெள்ளை பெண்களை உள்ளடக்கியிருந்தாலும், இரண்டாவது அலை பல்வேறு சமூக வகுப்புகளைச் சேர்ந்த பெண்களையும், நிறவாதத்தினை எதிர்க்கும் வகையில், ஒற்றுமையை விரும்பும் பிற வளரும் நாடுகளைச் சேர்ந்த பெண்களின் உரிமைகளையும் உள்ளடக்கி இருந்தது. [3] மூன்றாம் அலை பெண்ணியம் பெண்களின் வணிக, குடும்ப வாழ்வில் நிதி, சமூக மற்றும் கலாச்சார ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்கும் வகையில் அமைந்து இருந்தது, மேலும் அரசியல் மற்றும் ஊடகங்களில் பெண்களின் பங்களிப்பினை அதிகரிக்கும் நோக்கில் பல பிரச்சாரங்களை மேற்கொண்டது.. அரசியல் செயல்பாட்டிற்கு எதிராக, பெண்ணியவாதிகள் கருக்கலைப்பு உரிமை போன்ற பெண்களின் இனப்பெருக்க உரிமைகள் மீது கவனம் செலுத்தினர். [4] நான்காவது அலை பெண்ணியம் பாரம்பரியமாக ஓரங்கட்டப்பட்ட குழுக்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும், அதிகாரத்தினைப் பகிர்ந்தளித்தல் ஆகியவற்றினை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது.[5]
Remove ads
வரலாறு
பெண்கள் இயக்கத்தின் தொடக்கத்திலிருந்தே, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவமின்மையே இதன் அடிப்படையாக அமைந்தது. அரசியல் மற்றும் சமூக போராட்டங்கள் மூலம், பெண்கள் சமத்துவத்தின் இடைவெளியை அகற்ற போராடினர். இயற்கையின் சட்டத்தை நியாயப்படுத்தி, பெண்கள் ஆண்களை விட தாழ்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள்.
பெண்ணியத்திற்கு முந்தைய சமூகம்
பெண்ணிய இயக்கம் வரலாறு முழுவதும் ஒரு தொடர்ச்சியான சக்தியாக இருந்து வருகிறது. பெண்ணிய இயக்கச் செயல்பாடுகள் ஆரம்பிக்கும் நாள் என்பதில் ஒரு தீர்க்கமான முடிவு ஆரம்பத்தில் ஏட்டப்படவில்லை. பல ஆண்டுகளாக ஆண்களும் பெண்களும் இது தொடர்பாக எழுதுக் கொண்டே வந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்ததே இதன் காரணமாக அமைந்தது. உதாரணமாக, பண்டைய கிரேக்கத்தைச் சேர்ந்த பெண் கவிஞர், சப்போ, கிமு 615 இல் பிறந்த இவர், பாலியல் உறவு பற்றி கவிதை எழுதி உள்ளார். [6]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads