பெரம்பூர் ஐயப்பன் கோயில்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஓர் ஐயப்பன் கோயில் From Wikipedia, the free encyclopedia

பெரம்பூர் ஐயப்பன் கோயில்map
Remove ads

பெரம்பூர் ஐயப்பன் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரம்பூர் பகுதியில்,[1][2] 13°06′39.1″N 80°14′44.0″E (அதாவது, 13.110850°N, 80.245550°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கடல் மட்டத்திலிருந்து சுமார் 33 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஓர் ஐயப்பன் கோயிலாகும்.

Thumb
பெரம்பூர் ஐயப்பன் கோயில், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
விரைவான உண்மைகள் பெரம்பூர் ஐயப்பன் கோயில், அமைவிடம் ...

இக்கோயிலானது, கேரள பாரம்பரிய பாணி கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீசக்கரத்தின் மீது சின்முத்திரையுடன் அமர்ந்த கோலத்தில் சுமார் இரண்டு அடி உயரத்தில் ஐயப்பன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தினமும் நெய்யபிசேகப் பூசை நடைபெறுகிறது. இக்கோயிலில் பிரசாதமாக வெண்பொங்கல், பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.[3]

கேரளத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்ய, ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் நாள் ஐயப்பன் மாலை அணிந்து, அதற்குண்டான விரதங்களை, தொடர்ச்சியாக 41 நாட்கள் மேற்கொண்டு, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்து வரும் வழக்கத்தில், பெரம்பூர் ஐயப்பன் கோயிலிலும் கார்த்திகை மாதம் முதல் நாள் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குகின்றனர், சபரிமலை ஐயப்பன் சுவாமியைத் தரிசனம் செய்வதற்காக.

ஒவ்வோர் ஐயப்பன் கோயிலிலும், தத்துவமஸி என்று ஒரு குறிப்பு காணப்படும். தத்+துவம்+அஸி என்று அறியப்படும் அந்தக் குறிப்பானது, 'நீ எதைத் தேடி வந்தாயோ, அதுவாகவே நீ இருக்கிறாய்' என்று பொருள்படும். அதாவது, ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வீகத் தன்மை நிரம்பியுள்ளது என்பதை நாம் உணர வேண்டும் என்பதின் சாராம்சம் அது. மேலும், அனைத்து ஐயப்பன் கோயில்களிலும், சபரிமலையில் இருப்பது போன்று, 18 படிகள் கொண்ட மாதிரி ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும். அந்த 18 படிகளும் ஒவ்வொரு பக்தருக்கும் கீழ்க்கண்ட 18 தத்துவங்களை ஐயப்பன் உணர்த்துவதாகக் கருதப்படுகிறது.

Remove ads

18 படிகளின் தத்துவங்கள்

  1. பிறப்பு நிலையற்றது.
  2. சாங்கிய யோகம்.
  3. கர்ம யோகம்.
  4. ஞான யோகம்.
  5. சன்னியாசி யோகம்.
  6. தியான யோகம்.
  7. ஞான விஞ்ஞான யோகம்.
  8. அட்சர பிரம்ம யோகம்.
  9. ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்.
  10. விபூதி யோகம்.
  11. விஸ்வரூப தரிசன யோகம்.
  12. பக்தி யோகம்.
  13. சேஷத்ர விபாக யோகம்.
  14. குணத்ரய விபாக யோகம்.
  15. புருஷோத்தம யோகம்.
  16. தைவாசுரஸம்பத் விபாக யோகம்.
  17. ச்ராத்தாதரய விபாக யோகம்.
  18. மோட்ச சன்னியாச யோகம்.

சன்னதிகள்

ஐயப்பன் சன்னதி, சிவன் சன்னதி, பகவதி சன்னதி, கணபதி சன்னதி, சுப்பிரமணியர் சன்னதி ஆகியவை இக்கோயிலின் முக்கியமான சன்னதிகளாகும்.

திருவிழாக்கள்

மகர சங்கராந்தி, சித்திரை விஷூ, கார்த்திகை மாதம் முதல் நாள் ஆகியவை இக்கோயிலில் முக்கியமான திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads