பெரிக் ஆக்சலேட்டு

From Wikipedia, the free encyclopedia

பெரிக் ஆக்சலேட்டு
Remove ads

பெரிக் ஆக்சலேட்டு (Ferric oxalate) என்பது C6Fe2O12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். பெரிக் அயனிகளும் ஆக்சலேட்டு ஈந்தணைவிகளும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம், இரும்பு(III) ஆக்சலேட்டு (iron(III) oxalate) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஆக்சாலிக் அமிலத்தின் பெரிக் உப்பான பெரிக் ஆக்சலேட்டு வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. நீரேற்ற வினையின் மூலம் பெரிக் ஆக்சலேட்டை அடர் பச்சை நிற Fe2(C2O4)3·6H2O சேர்மமாக மாற்ற இயலும்.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...

மற்ற ஆக்சலெட்டுகளைப் போல பெர்ரிக் ஆக்சலேட்டும் தற்காலிக பல் மருத்துவத்தில் பயன்படுத்த ஆராயப்படுகிறது.[1] சிலவகை பற்பசை தயாரிப்புகளில் இதைப் பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் இதன் செயற்படுதிறன் கேள்விக்குறியாகவே கருதப்பட்டு வருகிறது.[2]

கல்லிவகை புகைப்பட அச்சிடும் செயமுறையில் ஒளியுணர் பொருளாக பெரிக் ஆக்சலேட்டு பயன்படுத்தப்படுகிறது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads