பெரியமேளம் (மங்கள இசை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெரியமேளம் (Periyamelam) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு இசை வடிவமாகும். இது நாகசுரம், ஒத்து, தவில், தாளம் ஆகிய இசைக் கருவிகளுடன் இசைக்கப்படுவதாகும்.[1][2] கோயில் சடங்குகளில் உற்சவர் புறப்பாடு, அபிடேகம், ஆராதனை, உச்சிக்காலப் பூசை போன்ற நிகழ்வுகளில் இது வாசிக்கப்படுகிறது. இறைவனுக்கு முதல் மரியாதையாக பெரிய மேளம் வாசித்தப் பின்பே, சின்னமேளம் என்று அழைக்கப்பட்ட பரதநாட்டிய நிகழ்சிகள் கோயில்களில் நடைபெற்று வந்துள்ளன.[3] சப்பானிய இசை அறிஞரான யோஷிடாகா தொராடா உலக இசை வடிவங்களில் ஈடு இணையற்றது என பெரியமேளத்தைக் கருதுகிறார்.[4] பெரியமேளம் என்னும் இசைவடிவம் மெல்ல மெல்ல மறைந்துவருவதாக கருதப்படுகிறது.

Remove ads
இதையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads