பெரியாண்டர்

From Wikipedia, the free encyclopedia

பெரியாண்டர்
Remove ads

பெரியாண்டர் (Periander (/ˌpɛriˈændər/; கிரேக்க மொழி: Περίανδρος; இறப்பு கி.மு. 585 ) என்பவர் பண்டைய கிரேக்கத்தின் பண்டைய கொரிந்துவை ஆண்ட சைப்செலிட் வம்சத்தின் இரண்டாவது சர்வாதிகாரி ஆவார். கொரிந்து வரலாற்றில் பெரியாண்டரின் ஆட்சி காலமே வளமான காலமாகும். ஏனெனில் இவரது நிர்வாக திறமை கொரிந்துவை கிரேக்கத்தின் பணக்கார நகர அரசுகளில் ஒன்றாக மாற்றியது. [1] பெரியாண்டர் ஒரு கொடுங்கோலன் மற்றும் கடுமையான ஆட்சியாளர் என்று பல தரவுகள் கூறுகின்றன. ஆனால் பிறர்[2]   இவர் ஒரு நியாயமான மன்னர் என்று கூறுகின்றனர். இவர் கொரிந்துவில் குடிமக்களிடையே பொருளாதார சமத்துவம் ஏற்படவேண்டி பல சட்டதிட்டங்களைக் கொண்டுவர உழைத்தார். இவர் பெரும்பாலும் கிரேக்கத்தின் ஏழு பரம ஞானிளில் ஒருவராகக் கருதப்படுகிறார். கிமு 6 ஆம் நூற்றாண்டின் மனிதர்கள் தங்கள் ஞானத்திற்காக பல நூற்றாண்டுகள் புகழ் பெற்றனர். (மற்ற ஏழு பரம ஞானிகளாக பெரும்பாலும் தேலேஸ், சோலோன், கிளியோபுலஸ், சிலோன், பயாஸ், பிட்டகஸ் ஆகியோர்.) [1]

விரைவான உண்மைகள் பெரியாண்டர், ஆட்சிக்காலம் ...
Remove ads

வாழ்க்கை

குடும்பம்

பெரியாண்டர் கொரிந்தின் இரண்டாவது சர்வாதிகாரியும், [3] சைப்செலிட் வம்சத்தின் நிறுவனர் சிப்செலஸின் மகனும் ஆவார். சிப்செலசின் மனைவிக்கு கிரேடியா என்று பெயர். அவரும் அவரது மகன் பெரியாண்டரும் ஒன்றாக படுத்ததாக வதந்திகள் பரவின. [4] பெரியாண்டர் எபிடாரசின் பிரோகிள்ஸ் மற்றும் எரிஸ்டீனியாவின் மகள் லைசைடை (அவர் அவ்வப்போது மெலிசா என்றும் குறிப்பிடுகிறார்) மணந்தார்.[4] இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்: அதில் ஒருவரான சிப்செலஸ், பலவீனமான மனம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. மற்றொருவரான லைகோஃப்ரான், புத்திசாலியானவர்.[4] லைவ்ஸ் அண்ட் ஒபினியன்ஸ் ஆஃப் எமினன்ட் பிலாசஃபர்ஸ் என்ற நூலின்படி, பெரியாண்டர், ஆத்திரத்தில், தன் மனைவியை உதைத்தார் அல்லது படிக்கட்டுகளில் இருந்து கீழே தள்ளிவிட்டார், அதனால் அவர் இறந்தார்.[4][5] கிரேக்க வரலாற்றாசிரியர் எரோடோட்டசு, பெரியாண்டர் தன் மனைவியின் சடலத்தை அவமதித்ததாகக் குறிப்பிடுகிறார். [6] தாய்க்கு ஏற்பட்ட துன்பமும், தந்தையின் மீதான கோபமும் லைகோஃப்ரானை கோர்சிரா தீவில் தஞ்சம் அடையச் செய்தது.[5] பெரியாண்டர் வயதான காலத்தில், தன் வாரிசைத் தன் பக்கத்தில் வைத்துக் கொள்ள விரும்பி, லைகோஃப்ரானை அழைத்தார்.[4] கோர்சிரா தீவு மக்கள் இதைக் கேள்விப்பட்டு, லைகோஃப்ரானை செல்லவிடாமல் கொன்றனர். மகனின் மரணம் பெரியாண்டரை விரக்தியடையச் செய்தது. அது இறுதியில் இவரது மரணத்திற்கு வழிவகுத்தது. [4] பெரியாண்டருக்குப் பிறகு இவரது மருமகன் சம்மெட்டிகஸ் ஆட்சிக்கு வந்தார். அவர் மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார். சைப்செலிட் சர்வாதிகாரிகளில் கடைசியானவராக இருந்தார். [7]

ஆட்சி

பெரியாண்டர் கொரிந்துவை பண்டைய கிரேக்கத்தின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாக உருவாக்கினார். [3] இவர் கால்சிடிசில் உள்ள பொடிடேயா மற்றும் இல்லிரியாவில் உள்ள அப்பல்லோனியாவில் தன் நாட்டு மக்களை குடியேற்றினார். [3] எபிடாரசைக் கைப்பற்றினார், மிலேட்டஸ் மற்றும் லிடியாவுடன் நேர்மறையான உறவுகளை உருவாக்கினார். மேலும் இவரின் மகன் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வாழ்ந்து கழித்த கோர்சிராவை தன்னாட்டுடன் இணைத்தார்.[3] கொரிந்தின் இஸ்த்மஸ் முழுவதும் டியோல்கோஸ் என்ற போக்குவரத்து அமைப்பை உருவாக்கிய பெருமையும் பெரியாண்டருக்கு உண்டு. கொரிந்தின் துறைமுகத்திற்கு வரும் சரக்குகளுக்கான சுங்கக் கட்டணங்களை கோயில்கள் மற்றும் பிற பொதுப் பணிகளுக்காகவும், இலக்கியம், கலைகளை மேம்படுத்தவும் பெரியாண்டர் பயன்படுத்தினார். நகரத்தில் நடந்த ஒரு கலை விழாவிற்காக லெஸ்போசிலிருந்து கொரிந்துக்கு கவிஞர் ஆரியனை வரச் செய்தார். பெரியாண்டர் பல விழாக்களை நடத்தி டோரிக் பாணியில் பல கட்டிடங்களைக் கட்டினார். கொரிந்திய பாணி மட்பாண்டங்கள் இவரது ஆட்சியின் போது ஒரு கைவினைஞரால் உருவாக்கப்பட்டது.

மக்களிடையே பொருளாதார சமத்துவத்தைக் கொண்டுவர பெரியாண்டர் மேற்கொண்ட ஆட்சிப் பாணியும் அரசியலும் 'கொடுங்கோன்மை' என்று அழைக்கப்பட்டது. இவர் பணக்காரர்களை விட ஏழைகளை ஆதரித்தார். சில சமயங்களில் நில உரிமையாளரின் உடைமைகளைப் பறிமுதல் செய்தனர் மேலும் அவர்களுக்கான சலுகைகளை மட்டுப்படுத்தி சட்டங்களை இயற்றினர். இவர் கோயில்கள், துறைமுகங்கள், கோட்டைகள் போன்றவறைக் கட்டத் தொடங்கினர். மேலும் நகரத்தின் வடிகால் மற்றும் நீர் பகிர்மானத்தை மேம்படுத்தினர். பெரியாண்டர் வணிகத்திற்கு பயனளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். [2]

Remove ads

எழுத்து மற்றும் தத்துவம்

பெரியாண்டர் இலக்கியத்தின் புரவலர் என்று கூறப்படுகிறது. இவர் 2,000 வரிகள் கொண்ட ஒரு உபதேசக் கவிதையை எழுதியதாகக் கூறப்படுகிறது. [4] புகழ்பெற்ற தத்துவஞானிகளின் வாழ்க்கை மற்றும் கருத்துகளில், ஏழு பரம ஞானியர் யார் என்பதில் எழுத்தாளர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது என்று டியோஜெனெஸ் லார்டியஸ் சுட்டிக்காட்டுகிறார். பெரியாண்டர் கொரிந்துவில் சீர்திருத்தத்தை மேம்படுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது; அவர் டியோஜெனெஸ் லேர்டியஸின் பட்டியலில் காணப்பட்டாலும், இவரது தீவிர செயல்பாடுகளும் சர்வாதிகார செயல்களும் இவரை ஞானிகளை விட பிரபலமான சர்வாதிகாரிகளின் பட்டியலில் மிகவும் பொருத்தமானதாக ஆக்குகின்றன.

Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads