பெரிய நாடோடிக் கூட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெரிய நாடோடிக் கூட்டம்[1] என்பது தங்க நாடோடிக் கூட்டத்தின் எஞ்சிய பகுதியைக் கொண்டு உருவான ஒரு நாடு ஆகும். இது பதினைந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 1502 ஆம் ஆண்டுவரை நீடித்திருந்தது.[2][3] சராய் நகரத்தில் தங்க நாடோடிக் கூட்டத்தின் உள் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நாடு இருந்தது. இந்த நாட்டில் இருந்துதான் ஆஸ்ட்ரகான் கானரசு மற்றும் கிரிமிய கானரசு ஆகிய நாடுகள் பிரிந்தன. அவை பெரிய நாடோடிக் கூட்டத்தின் எதிரி நாடுகளாயின. உக்ரா ஆற்றில் பெரிய நிலைப்பாட்டில், பெரிய நாடோடிக் கூட்டத்தின் படைகள் உருசியாவின் மூன்றாம் இவானிடம் தோற்ற நிகழ்வானது உருசியா மீதான தாதர் நுகத்தடியின் முடிவாக அடையாளப்படுத்தப்படுகிறது.

Remove ads

பெரிய நாடோடிக் கூட்டத்தின் வீழ்ச்சி

சூச்சியின் தங்க நாடோடிக் கூட்டமானது பதினான்காம் நூற்றாண்டில் பலவீனமான தன்மையைக் காட்டத் தொடங்கியது. இந்த அரசியல் அமைப்பில் பிரச்சினைகள் ஆரம்பித்தன. 1390களில் தோக்தமிசால் மீண்டும் தங்க நாடோடிக் கூட்டமானது ஒன்றிணைக்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் தைமூரின் படையெடுப்பானது நாடோடிக் கூட்டத்தை மேலும் பலவீனமடையச் செய்தது. எடிகுவின் (நாடோடிக் கூட்டத்தைக் கடைசியாக இணைத்த நபர்) இறப்பு நிகழ்ந்த 1419ஆம் ஆண்டானது தங்க நாடோடிக் கூட்டத்தின் சிதைவின் கடைசி படிகளில் ஒன்றை அடையாளப்படுத்துகிறது. சிதைவடைந்த அரசானது நோகை கானரசு, கசன் கானரசு மற்றும் கசனில் இருந்து பிரிந்த கசிமோவ் கானரசு என தனித்தனி நாடுகளானது. தங்க நாடோடிக் கூட்டத்தின் வாரிசு நாடு நாங்கள்தான் என இந்த ஒவ்வொரு கானரசுகளும் கோரின. தங்க நாடோடிக் கூட்டத்தின் தேசிய மையம் ஆகிய சராய் நகரத்தை மையமாகக் கொண்டு தான் பெரிய நாடோடிக் கூட்டமும் இருந்தது. இதன் பகுதிகளானவை 4 பழங்குடியினங்களால் தலைமை தாங்கப்பட்டன. அவை கியாத், மங்குத், சிசிவுத் மற்றும் கொங்கிராடு ஆகியவை ஆகும்.[4] பெரிய நாடோடிக் கூட்டமானது எளிமையாக ஓர்டா அல்லது ஹோர்ட் என அழைக்கப்பட்டது. ஆனால் அப்பகுதியில் இருந்த வெவ்வேறு நாடோடிக் கூட்டங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றை பிரித்து அறிவதற்காக இந்த நாட்டின் பெயர் முதன்முதலாக ஆதாரங்களில் 1430களில் பெரிய நாடோடிக் கூட்டம் என்று குறிப்பிடப்பட்டது. முன்பு செழித்திருந்த தங்க நாடோடிக் கூட்டத்தின் பெருமையுடன் தொடர்பு படுத்துவதற்காக இந்நாடு பெரிய நாடோடிக் கூட்டம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.[5]:13–14

Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads