பெரிலியம் கார்பனேட்டு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெரிலியம் கார்பனேட்டு (Beryllium carbonate ) என்பது BeCO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும்

விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
Remove ads

அமைப்புகள்

பெரிலியம் கார்பனேட்டு மூன்று வடிவங்களில் காணப்படுகிறது. நீரற்றது, நான்குநீரேற்ற வடிவம் மற்றும் அடிப்படை பெரிலியம் கார்பனேட்டு என்பன அம்மூன்று வகைகளாகும். நீரற்ற நீரிலி வடிவ பெரிலியம் கார்பனேட்டு நிலைப்புத் தன்மையற்ற சேர்மமாகக் காணப்படுகிறது. இது பெரிலியம் ஆக்சைடு மற்றும் கார்பன் டையாக்சைடாக சிதைவடைகிறது[2]. பெரிலியம் ஐதராக்சைடு கரைசலில் கார்பன் டையாக்சைடு குமிழ்களை செலுத்துவதன் மூலமாக நான்கு நீரேறிய பெரிலியம் கார்பனேட்டு உருவாகிறது இருந்தாலும் இவ்வடிவமும் நிலைப்புத்தன்மை அற்றதாகவே உள்ளது[3] .

Remove ads

தயாரிப்பு

அடிப்படை பெரிலியம் கார்பனேட்டு ஒரு கலவை உப்பாகும். பெரிலியம் சல்பேட்டும் அமோனியம் கார்பனேட்டும் சேர்ந்து வினைபுரிவதன் மூலம் இதைத் தயாரிக்க முடியும். இதனுடைய மூலக்கூறில் கார்பனேட்டு அயனியும் ஐதராக்சைடு அயனியும் இடம்பெற்று Be2CO3(OH)2 என்று குறிக்கப்படுகிறது[4]. முன்னோர் இச்சேர்மத்தைத்தான் பெரிலியம் கார்பனேட்டு என்று அழைத்ததாக நம்பப்படுகிறது.

பாதுகாப்பு

பல பெரிலியம் சேர்மங்கள் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை என்பதால் இதையும் கவனித்துடன் கையாளவேண்டும். உடம்பின் மீது எரிச்சலை உண்டாக்கும் தன்மை இதற்கு உண்டு.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads