பெருந்தலைவர் மக்கள் கட்சி
இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெருந்தலைவர் மக்கள் கட்சி (Perunthalaivar Makkal Katchi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும்.[1]
வரலாறு
தென்தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட நாடார் சமூகத்தினரால் இந்த கட்சி தோற்றுவிக்கப்பட்டது. தன் வாக்கு வங்கியாகத் தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள நாடார்களை மையமாகக் கொண்டு இக்கட்சி செயல்படுகிறது. கட்சி 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் நாளன்று பா.சிவந்தி ஆதித்தன் அவர்களால் தொடங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டது.
தேர்தல் வரலாறு
தேர்தல் கூட்டணி
தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் இவர்களுக்கு ஒரு தொகுதியை 2011ஆம் ஆண்டு தேர்தலில் ஒதுக்கியது.[2] இத்தேர்தலில் என். ஆர். தன்பாலன் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads