பெருமாள் கோயில்

இந்துக் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெருமாள் கோயில் என்பது வைணவ நெறியைப் பின்பற்றி பூசைகள் நடைபெறும் வழிபாட்டுத் தலமாகும். இந்துக் கோயிலின் கருவறையில் வீற்றிருக்கும் மூலவர் தெய்வம் திருமால் (மகாவிஷ்ணு) அம்சமாக இருக்கும் பட்சத்தில், அக்கோயில் பெருமாள் கோயில் என்று அழைக்கப்படும். அந்த அம்சமானது, வெவ்வேறு திருநாமங்கள் மற்றும் தோற்றங்கள் கொண்டு விளங்குகிறது. உதாரணத் திருநாமங்களாக, வேங்கடேசப் பெருமாள், சீனிவாசப் பெருமாள், அரங்கநாதர், வரதராஜ பெருமாள், உலகளந்த பெருமாள், சுந்தரராஜ பெருமாள், கோவிந்தராஜ பெருமாள், பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், அனந்த சயனப் பெருமாள், நித்திய கல்யாணப் பெருமாள், நரசிங்கப் பெருமாள், சௌமிய நாராயணப் பெருமாள், தலசயனப் பெருமாள், லெட்சுமி நாராயணப் பெருமாள், சென்ன கேசவப் பெருமாள், ஆதிகேசவப் பெருமாள், நாராயணப் பெருமாள், கரி வரதராஜ பெருமாள், சிங்கப் பெருமாள், வீரராகவப் பெருமாள், மாதவப் பெருமாள், பத்மநாப சுவாமி, பார்த்தசாரதி, அத்தி வரதர், கள்ளழகர், கூடல் அழகர் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

திருமலை திருப்பதியில், வேங்கடேசப் பெருமாள் என்ற திருநாமத்துடன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.[1] திவ்ய தேசங்களில் முதல் தலமான திருச்சிராப்பள்ளியின் திருவரங்கத்தில், அரங்கநாதர் என்ற பெயரில் கோயில் அமையப் பெற்றுள்ளது.[2][3] காஞ்சிபுரத்தில், வரதராஜ பெருமாள் என்ற திருநாமம் கொண்டு, கோயில் நிறுவப்பட்டுள்ளது.[4][5] கோயம்புத்தூரின் சிங்காநல்லூர் பகுதியில், உலகளந்த பெருமாள் என்றும் அழைக்கப்பட்டு, பெருமாள் கோயில் உள்ளது.[6] சென்னையிலுள்ள எழும்பூரில், சீனிவாசப் பெருமாள் திருக்கோலம் கொண்டு, கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.[7] மதுரையின் அழகர் கோவிலில், கள்ளழகர் தோற்றத்துடன் கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.[8]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads