பெல்கோரத் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெல்கோரத் மாகாணம் (Belgorod Oblast, உருசியம்: Белгоро́дская о́бласть, பெல்கோரத்ஸ்கய ஓபிலாஸ்து) என்பது உருசியாவின் நடுவண் நிருவாக அலகு ஆகும். இதன் நிருவாக மையம் பெல்கோரத் நகராகும். மாகாணத்தின் மக்கள்தொகை 1,532,526 (2010 கணக்கெடுப்பு).[6]
Remove ads
புவியியல்
பெல்கோரத் மாகாணத்தின் எல்லைகளாக தெற்கிலும் மேற்கிலும் உக்ரைனின் லுகான்ஸ்க், கார்க்கிவ், சூமி மாகாணங்களும், வடக்கு, வடமேற்கே கூர்ஸ்க் மாகாணம், கிழக்கே வரனியோசு மாகாணம் ஆகியன அமைந்துள்ளன. எல்லைகளின் மொத்த நீளம் 1,150 கி.மீ. ஆகும். இவற்றில் 540 கி.மீ. உக்ரைனின் எல்லையில் உள்ளது. மாகாணத்தின் மொத்தப் பரப்பளவு 27,100 சதுரகி.மீ.. இம்மாகாணம் தினேப்பர் ஆறு, தொன் ஆற்று வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ளது.
மக்கள்
2010 கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள்தொகை 1,532,526 ஆகும். இவர்களில் 66.1% நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.[6] உருசிய மொழி இம்மாகாணத்தின் அதிகாரபூர்வ மொழியாகும். 94.4% உருசியர்கள், 2.8% உக்ரைனியர்கள், 0.5% ஆர்மீனியர்கள் ஆவர்.[10]
சமயம்
2012 தரவுகளின் படி,[11] 50.5% மக்கள் உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுகின்றனர். 8% ஏனைய கிறித்தவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். 8.5% வேறு சமயங்களைப் பின்பற்றுகின்றனர்.[11]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
