பெல்ஜிய அரச காற்பந்துச் சங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெல்ஜிய அரச காற்பந்துச் சங்கம் (Royal Belgian Football Association அல்லது KBVB) என்பது பெல்ஜியம் நாட்டில் காற்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் அமைப்பாகும். இதன் தலைமையகம் பிரசெல்சு நகரில் அமைந்துள்ளது.
பெல்ஜிய அரச கால்பந்துச் சங்கமானது ஆண்கள், மகளிர் மற்றும் இளையோருக்கான தேசிய கால்பந்து அணிகளைத் தேர்ந்தெடுத்து நிர்வகிக்கிறது.[1] மேலும் பெல்ஜியத்தின் கால்பந்துக் கூட்டிணைவு அமைப்பினையும் இச்சங்கமே நிர்வகிக்கின்றது. அதன்கீழ் வருவன:
- பெல்ஜிய தொழின்முறைக் கூட்டிணைவு
- இரண்டாம் நிலைக் கூட்டிணைவு
- மூன்றாம் நிலைக் கூட்டிணைவு
- கழகங்களின் தகுதியேற்றம்-தகுதிகுறைப்பு
- பிராந்தியக் கூட்டிணைவுகள்
- பெல்ஜிய அரச காற்பந்துச் சங்கக் கோப்பை
- பெல்ஜிய உன்னதக் கோப்பை
- புட்சல் (ஐவர் காற்பந்து) போட்டிகள்
- மகளிர் காற்பந்துப் போட்டிகள்
நெதர்லாந்து அரச கால்பந்துச் சங்கத்தோடு இணைந்து இருநாடுகளுக்கும் பொதுவான மகளிர் கூட்டிணைவை (பெநெ கூட்டிணைவு) நடத்துகின்றது.
Remove ads
குறிப்புதவிகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads