பேரியம் ஆக்சலேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பேரியம் ஆக்சலேட்டு (Barium oxalate ) என்பது BaC2O4 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஆக்சாலிக் அமிலத்தின் பேரியம் உப்பாகும். இது வெண்மை நிற துகள்களாக நெடியற்று உள்ளது. மக்னீசியம் சேர்க்கப்படும் சிறப்பான வாணவெடிச் செய்முறைகளில் சிலவேளைகளில் பச்சை வண்ண உற்பத்திக்காக பேரியம் ஆக்சலேட்டு பயன்படுத்தப்படுகிறது.
பேரியம் ஆக்சலேட்டு பெரும்பாலும் அதிக நிலைப்புத் தன்மையுடன் இருப்பதால் வலிமையான அமிலங்களுடன் இதனால் வினைபுரிய இயல்கிறது. தோலில் பட்டால் இலேசான எரிச்சலை உண்டாக்கும். உட்கொள்ள நேரிட்டால் இது ஒரு நச்சாக செயல்படுகிறது. குமட்டல், வாந்தி, சிறுநீரக செயலிழப்பு மற்றும் உணவுப் பாதையில் காயமேற்படுத்துதல் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். பேரியம் ஆக்சலேட்டு தயாரிக்க ஆக்சாலிக் அமிலம், பேரியம் ஐதராக்சைடு எண்ம ஐதரேட்டு மற்றும் பேரியம் ஐதராக்சைடு போன்ற தாதுப்பொருட்கள் தேவைப்படுகின்றன.
பேரியம் குளோரைடு கரைசல் மற்றும் ஆக்சாலிக் அமிலக் கரைசல் ஆகியவற்றை சேர்த்தும் மாற்று முறையில் பேரியம் ஆக்சலேட்டு தயாரிக்கலாம்.
BaCl2 + H2C2O4 → BaC2O4↓ + 2 HCl
மற்ற வாணவேடிக்கை செய்பொருட்களில் இருந்து இது வேறுபட்டதாகும். அவை ஆக்சிசனேற்றிகளாகச் செயல்படுகின்றன, இது மட்டுமே ஆக்சிசன் ஒடுக்கியாகச் செயல்படுகிறது. நிரில் முற்றிலும் கரையாத பேரியம் ஆக்சலேட்டு சுடுபடுத்தும் போது ஆக்சைடாக மாற்றமடைகிறது.
Remove ads
வெளிப்புற இணைப்புகள்
- rec.pyrotechnics FAQ
- MSDS பரணிடப்பட்டது 2006-10-25 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads