பையனூர் எட்டீசுவரர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பையனூர் எட்டீசுவரர் திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பையனூரில் உள்ள விஜயநாத விக்கிரம பல்லவ மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட 1300 ஆண்டு பழைமையான சிவபெருமான் திருக்கோயில்.[1]

விரைவான உண்மைகள் பையனூர் எட்டீசுவரர் திருக்கோயில், பெயர் ...
Remove ads

விமானம்

இத்திருக்கோயிலின் விமானம் கஜபிருஷ்ட விமான வகையைச் சேர்ந்தது.[1]

தலவரலாறு

நாகன்

இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உழுது வரும் விளைச்சலில் ஒரு பங்கை தனக்கும் மற்றதை திருக்கோயிலுக்கும் அளிக்கும்படி நாகன் எனும் பக்தரோடு ஊர் மக்கள் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆண்டுதோறும் எட்டீஸ்வரர் முன்பு விளைச்சலை அளக்கும் பழக்கம் இருந்த சமயம், ஊர் மக்கள் ஒருமுறை நாகனின் பங்கை நாகனுக்குத் தர மறுத்தனர், இத்தல இறைவனாரிடம் முறையிட்ட நாகனின் வருத்தம் நீக்க சிவபெருமான் அசரீரியாக ஊர் மக்களுக்கு அவர்கள் தவறை உணர்த்த, மனம் திருந்திய மக்கள் நாகன் பங்கை அவருக்கே அளித்து மன்னிக்க வேண்டினர். [1]

பழமொழி

""எட்டீஸ்வரரை எட்டித் தரிசித்தால் கிட்டாத கயிலாயமும் கிட்டிவிடும்" என்பது அக்காலத்தில் வழங்கிய முதுமொழி.[1]

சிறுகுறிப்புத் தொண்டர்

சிறுகுறிப்புத் தொண்ட நாயன்மார் இத்திருத்தலத்து இறைவனாரை வழிபட்டமை பெரியபுராணம் 1080 ஆவது பாடலில் வருகின்றது. [1]

கல்வெட்டுத் தகவல்கள்

பல்லவ மன்னர் நந்திவர்மன் (2) ஆட்சிகாலக் கல்வெட்டுகள் இத்திருக்கோயிலில் ஐந்து உள்ளன. இதில் ஒன்றில் உள்ள தகவல் அக்காலத்தில் திருக்கோயில்களை நிர்வகிப்பதில் இருந்த நேர்த்தியைத் தெரிவிக்கின்றது. பையனூர் பெருமக்கள் அவ்வூர் ஏரியைத் தூர் வார ஒப்புக்கொண்டதையும், ஆண்டுதோறும் தூர்வார ஆகும் செலவிற்கு மாமல்லபுரத்து நாகனிடம் வட்டியாகப் பெறப்பட்ட 6400 காடி நெல் பயன்படுத்தப்படும் என்றும் இந்த நெல் பொற்காலால் எனும் அளவையால் அளந்து தரப்பட வேண்டும் எனும் நிபந்தனையும் கூறப்படுகின்றது.

மேலும் இந்த ஏரியிலிருந்து பெறும் நீரைப் பயன்படுத்தும் நிலங்களை வேறொருவருக்கு விற்றாலோ, அடமானம் வைத்தாலோ தண்டனையாக ஒரு பட்டி நிலத்திற்கு 16 காடி வசூலிக்கப்படும் என்றும் இதனை எழுதியவர் செட்டி நந்தி என்று பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை மீறுவோர் நரகத்திற்கும் நன்முறையில் பராமரிப்போர் சொர்க்கத்திற்கும் போவார் என்னும் குறிப்பும் இடப்பட்டுள்ளது. [1]

Remove ads

சிறப்பு

வழக்குகளில் நீதிகிடைக்காமல் சிரமப்படுவோர் வழிபடும் திருத்தலம்.[3]

அமைவிடம்

மாமல்லபுரத்திலிருந்து 6 கி.மீ தொலைவிலும் திருக்கழுக்குன்றத்தில் இருந்து 12 கி.மீ தொலைவிலும் உள்ளது பையனூர். சென்னையில் இருந்து 115,515, 568, 119 எண்பேருந்துகள் பையனூர் வழியே செல்கின்றன.

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads