பொட்டாசியம் ஈத்தாக்சைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொட்டாசியம் ஈத்தாக்சைடு (Potassium ethoxide) என்பது C2H5KO. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தை பொட்டாசியம் எத்தனாலேட்டு என்றும் பொட்டாசியம் எத்தாக்சைடு என்றும் அழைக்கிறார்கள். அரை வெண்மை அல்லது மஞ்சள் நிறத்தில் தூளாக இது காணப்படுகிறது. பொட்டாசியம் ஈத்தாக்சைடு எத்தனாலின் இணை காரமான ஈத்தாக்சைடு அயனியால் ஆக்கப்பட்டுள்ளது என்பதால் இதுவொரு வலிமையான காரமாக மாற்றப்படுகிறது. மேலும் நீராற்பகுப்பு அடைந்து எத்தனால் மற்றும் பொட்டாசியம் ஐதராக்சைடு போன்றவற்றைக் கொடுக்கிறது.
Remove ads
பயன்கள்
சோடியம், பொட்டாசியம் மீத்தாக்சைடுகள், பொட்டாசியம் மூவிணைய பியூட்டாக்சைடு போல ஒரு வலிமையான காரமாக இது பயன்படுத்தப்படுகிறது. எத்தனாலுடன் வினையூக்கி அளவுக்கு சேர்த்து பயன்படுத்தப்பட்டு மாற்று எசுத்தராக்கல் வினைகளின் மூலம் எத்தில் எசுத்தர்களை உருவாக்குகிறது. டையெத்தில் மலோனேட்டு பயன்படுத்தப்படும் மாலோனிக் எசுத்தர் தொகுப்பு வினைகளிலும் சோடியம் அல்லது பொட்டாசியம் ஈத்தாக்சைடு ஒரு பொருத்தமான காரமாகச் செயல்படுகிறது.
Remove ads
பாதுகாப்பு
பொட்டாசியம் ஈத்தாக்சைடு நிலையான ஒரு சேர்மம் ஆகும். ஆனால் தீப்பிடித்து எரியக்கூடியதாகவும் அரித்துச் சிதைக்கக் கூடியதாகவும் உள்ளது. தண்ணீருடன் தீவிரமாக வினைபுரியும் தன்மையைக் கொண்டுள்ளது. ஈரக்காற்றில் படநேர்ந்தால் வெப்பமடைந்து தீப்பற்றி எரியத் தொடங்குகிறது. எனவே காற்று ஈரப்பதம், நீர், அமிலங்கள், ஆக்சிசனேற்றிகள் மற்றும் ஒடுக்கும் முகவர்கள் [3] போன்றவற்றிடமிருந்து விலக்கி பிரித்து வைத்திருத்தல் அவசியமாகும். தோலில் கடுமையான புண்களையும் உண்டாக்குகிறது.[4].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads