பொம்மலாட்டம் (1968 திரைப்படம்)

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

பொம்மலாட்டம் (1968 திரைப்படம்)
Remove ads

பொம்மலாட்டம் (Bommalattam) என்பது 1968 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தை வி. இராமசாமி தயாரித்தார். மதுரை திருமாறனின் கதைக்கு சோ ராமசாமி திரைக்கதை எழுதினார். இப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா, நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், சோ ராமசாமி, மனோரமா, வி. எஸ். ராகவன், சச்சு, ஓ. ஏ. கே. தேவர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 1968 மே 31 அன்று வெளியானது.

விரைவான உண்மைகள் பொம்மலாட்டம், இயக்கம் ...
Remove ads

கதை

மருத்துவர் தாமோதரன் (வி. எஸ். ராகவன்) இந்தியாவின் தலை சிறந்த கண் மருத்துவர். அவரது இரு மகள்களான மாலதியும் (ஜெயலலிதா), கீதாவும் (சச்சு) அவர்களது உறவினரான துரை (நாகேஷ்) ஆகியோர் ஒரே கல்லூரியில் பயில்கின்றனர். அவர்களுடன் சுகுமாரும் (ஜெய்சங்கர்) கல்லூரியில் படிக்கிறார். இந்திலையில் கீதாவை துரை காதலிக்கின்றார். ஆனால் கீதாவோ தன் அக்காள் மாலதி யாரையாவது காதலித்தால் மட்டுமே தான் காதலிப்பதாக நிபந்தனை விதிக்கிறாள். இதனால் மாலதியையும் சுகுமாரையும் காதலிக்க வைக்க முயன்று துரை பல யுக்திகளை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துகிறார். முதலில் எதிரும் புதிருமாக இருந்த சுகுமாரும், மாலதியும் காதலிக்கத் துவங்குகின்றனர்.

சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவரின் மகனான பார்வை இழந்த பால்ராஜ் என்பவர் தாமோதரனிடம் சிகிச்சைப் பெற சென்னை வருகிறார். அப்படியே தாமாதரன் தன் தந்தைக்கு தரவேண்டிய பணத்தை வாங்கிச் செல்லலாம் என்று எண்ணுகிறார். இதை அறிந்த ரத்தினமும் (மேஜர் சுந்தர்ராஜன்) அவனது கூட்டாளிகளும் அப்பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். அதற்காக பால்ராஜ் போல வேடமிட்டு ரத்தினம் தாமோதரனிடம் செல்கிறான். அறுவை சிகிச்சையை ரத்தினம் தள்ளிப்போட்டுக் கொண்டே செல்கிறான். இதனால் தாமோரனுக்கு ரத்தினத்தின் மீது சந்தேகம் எழுகிறது. ஒரு கட்டத்தில் ரத்தினத்தின் கும்பல் தாமோதரனை கடத்திச் சென்று ஒரு கட்டடத்தில் அடைத்து வைக்கிறது. அவரை காப்பாற்ற சுகுமார், துரை, ஜக்கு ஆகிய மூவரும் போராடி வெற்றிபெறுகின்றனர்.

Remove ads

நடிப்பு

இசை

வி. குமார் இசையமைக்க, வாலி, ஆலங்குடி சோமு, நா. பாண்டுரங்கன் மற்றும் அவினாசி மணி ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.[2] "வா வாத்தியாரே" பாடலுக்கு, சீனிவாசன் சென்னைத் தமிழைப் பயன்படுத்த விரும்பினார், ஆனால் வாலி அது தனக்கு கடினமாக இருந்தது, எனவே "பாடலுக்கு ஏற்ற வார்த்தைகளை வழங்க" எம். எல். கோவிந்த் பணியமர்த்தப்பட்டார், இதுவே பாடலில் "ஜாம்பஜார் ஜக்கு, நா சைதாபேட்ட கொக்கு" போன்ற வரிகள் படலில் இடம்பெற காரணமாயிற்று.[3] அதுவே தமிழ்த் திரைப்படங்களில் இடம்பெற்ற முதல் கானா பாடலாகவும் ஆனது.[4] வாலி எழுதி மனோரமா பாடிய "வா வாத்தியாரே வூட்டாண்ட" பாடல் பிரபலமானது, மேலும் 1991 ஆம் ஆண்டில் ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் அதே தலைப்பில் மனோரமா பாடிய பாடல்களைக் கொண்ட ஒரு பாடல் தொகுப்பை வெளியிட்டது.[5]

மேலதிகத் தகவல்கள் பாடல், பாடகர்(கள்) ...

வரவேற்பு

கல்கி இதழ் நேர்மறையான விமர்சனங்களைக் கொடுத்து பாராட்டினாலும் படத்தின் தலைப்பு கதைக்கு சம்பந்தம் இல்லை என்று விமர்சித்தது.[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads