பொம்மிடி
தருமபுரி மாவட்ட சிற்றூர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொம்மிடி (Bommidi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643524.[1] இது பொம்மிடி ஊராட்சிக்கு உட்பட்டது.
Remove ads
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 330 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம்11°58'59.4"N 78°14'46.4"E[3] ஆகும்.
மக்கள் வகைபாடு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 2006 குடும்பங்களும் 8026 மக்களும் வாழ்கின்றனா். இதில் ஆண்கள் 4116 பெண்கள் 3910 ஆவா்.[4] இங்கு அரசின் சார்பில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமாா் 220 மாணவர்கள் கற்கின்றார்கள். பொம்மிடியில் இரயில்வே நிலையம் உள்ளது சிறப்பிற்குாியது.
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads