பொ. மோகன்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

பொன்னுசாமி மோகன் (Ponnuswamy Mohan, 30 திசம்பர் 1949 30 அக்டோபர் 2009) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவர் 13 ஆவது மற்றும் 14 ஆவது மக்களவையின் உறுப்பினர் ஆவார். தமிழ்நாட்டில் மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

விரைவான உண்மைகள் பொ. மோகன், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ...
Remove ads

அரசியல்

பொ. மோகன் மதுரை மாவட்டம் சோழ வந்தானில் பிறந்தார். அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ படித்தார். பொ. மோகன் 1973 ஆம் ஆண்டு இயக்கத்தில் சேர்வதற்கு முன்னதாக மாணவர் இயக்கத்தில் ஒரு தீவிரமான செயல்பாட்டாளராக இருந்துள்ளார். இவர் மதுரையில் இந்திய சனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக பின்னர் பணிபுரிந்துள்ளார்.  சில காலத்திற்கு இவர் மதுரை நகர்ப்புற கட்சியின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். மதுரையில் பொ. மோகன் பல்வேறு பெரிய போராட்டங்களை நடத்தியுள்ளார். மதுரை மாவட்ட அரசு மருத்துவமனையின் வசதிகளை மேம்படுத்த வேண்டி அவர் நடத்திய போராட்டமானது குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டத்தின் போது பொ. மோகன் காவல்துறையால் மிகவும் கொடூரமாகத் தாக்கப்பட்டு நீண்ட காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 1999 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தமிழக மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பல விவாதங்களை சிறப்பாகத் தொடங்கியுள்ளார். பொ. மோகன் அவருடைய ஓய்வறியா உழைப்பிற்காக என்றென்றும் நினைவு கூரப்படுவார். அவர் பொதுமக்களின்பால் கொண்ட அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் அவரது எளிமை இவற்றின் காரணமாக நன்கு அறியப்பட்டவராவார்.

Remove ads

மறைவு

பொ. மோகன் உடல் நலக் குறைவால் 30 அக்டோபர் 2009 மாலை 6.30 மணியளவில் இறந்தார்.[1][2][3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads