போசிஸ் (பண்டைய பிராந்தியம்)
கிரேக்கத்தின் வரலாற்று கால பிராந்தியம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
போசிஸ் (Phocis) என்பது தெல்பியை உள்ளடக்கிய பண்டைய கிரேக்கத்தின் நடுப் பகுதியில் உள்ள ஒரு பழங்கால பகுதியாகும். போசிஸ் என்று அழைக்கப்படும் தற்போதைய நிர்வாக அலகானது, பண்டைய பிராந்தியத்தின் பெயரைக்கொண்டு இடப்பட்டது. என்றாலும் நவீன பிராந்தியம் பண்டைய பிராந்தியத்தை விட கணிசமாக பெரியதாகும்.
புவிசார் அரசியல் ரீதியாக, போசிஸ் போசியன்களின் நாடு. அவர்கள் பண்டைய கிரேக்கத்தின் மூன்று முக்கிய பேச்சுவழக்குகளில் ஒன்றான டோரிக் கிரேக்க பேச்சுவழக்கைக் கொண்டிருந்தனர். அவை நடு கிரேக்கத்தின் பல சிறிய மலை அரசுகளில் ஒன்றாகும், அதன் பேச்சுவழக்குகள் வடமேற்கு டோரிக் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கிரேக்க இரும்பு காலத்தின் தொடக்கத்தில் பைலோஸ் மற்றும் பிற தெற்கு கிரேக்க கோட்டைகளை எரித்து, பெலோபொன்னேசியாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றவும் டோரியன்கள் கொரிந்து வளைகுடாவைக் கடந்து தங்கள் பிராந்தியத்தில் இருந்து வந்தனர். வளைகுடாவின் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள டோரியன்களின் இரு குழுக்களின் பேச்சுவழக்குகள் பின்னர் வேறுபடத் தொடங்கின. போசிசைச் சுற்றியுள்ள அரசுகளில் ஒன்று செவ்வ்வியல் காலங்களில் டோரிஸ் என்று அழைக்கப்பட்டது.
Remove ads
நிலவியல்
பண்டைய போசிஸ் சுமார் 1,619 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது ஆகும். அதன் மேற்கில் ஓசோலியன் லோக்ரிஸ் மற்றும் டோரிசும், வடக்கே ஓபன்டியன் லோக்ரிசும், கிழக்கில் போயோட்டியாவும், தெற்கில் கொரிந்து வளைகுடா ஆகியவற்றை எல்லைகளாக கொண்டிருந்தது. பர்னாசஸ் 2,459 மீ (8,068 அடி) பெரிய மலைமுகடு, நாட்டின் நடுப்பகுதியைக் கடந்து, அதை இரண்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிக்கிறது.
பொருள் வளங்கள் மிகுந்ததாகவோ அல்லது வணிக நடவடிக்ககளுக்கு ஏற்றதாகவோ இல்லாததால், போசிஸ் முக்கியமாக நாட்டுப்புற பகுதியாக இருந்தது. பெரிய நகரங்கள் எதுவும் அதன் எல்லைக்குள் உருவாகவில்லை. என்றாலும் அதன் முக்கிய இடங்களான தெல்பி மற்றும் எலேடியா போன்றவை முக்கியமாக புவிசார் முக்கியத்துவம் அல்லது கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தவை.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads