போல்செவிக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
போல்செவிக் போல்ஷெவிக், போல்சுவிக் (உருசியம்: большевик ஆங்கிலம்: Bolshevik) என்பது மார்க்சிய ரசிய சமூக ஜனநாயக தொழிற்கட்சியின் ஒரு குழுவும் பின்னர் அப்பெயரால் அறியப்பட்ட ரசிய நாட்டின் ஒரு கட்சியுமாகும். 1903ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் இரண்டாம் கூட்டத்தில் மார்க்சிய ரசிய சமூக ஜனநாயக தொழிற்கட்சி பிளவடைந்தது.[1] லெனினாலும் அலெக்சாந்தர் பக்தனோவாலும் தொடங்கப்பட்ட இக்குழுவே சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிசக் கட்சியாக உருவெடுத்தது. 1917ம் ஆண்டு ரசியப்புரட்சியை முன்னின்று நடத்தி சோவியத் ஒன்றியம் உருவாக மூலமாகவும் அமைந்தது.

Remove ads
பெயர் மூலம்
большевик என்ற ரசியச்சொல்லின் பலுக்கம் பல்ஷேவிக் என்பதாகும். பெரும்பான்மையானவர் என்பது அதன் பொருளாகும். பிரஸ்ஸல்ஸ் மற்றும் லண்டனில் நடைபெற்ற மார்க்சிய ரசிய சமூக ஜனநாயக தொழிற்கட்சியின் இரண்டாம் கூட்டத்தில் பெரும்பான்மையான தீர்மானங்களில் வென்ற குழுவினர் பெரும்பான்மையானவர் பல்ஷேவிக் எனவும் மாற்றுக்குழுவினர் சிறுபான்மையானவர் மென்ஷேவிக் (меньшевик) எனவும் அழைக்கப்பட்டனர்.[2]
உருவாக்கம்
1917ம் ஆண்டு ரசியப்புரட்சிக்குப் பிந்தைய இடைக்கால ரசிய அரசின் முதலமைச்சராக சமூகபுரட்சிக் கட்சியின் கெரன்ஸ்கி ஆனார். அவருடைய முதலாளிகள் வர்க்கத்திற்கு ஆதரவான மனப்போக்கினை லெனின் வெறுத்தார். தனது தாய்க் கட்சியான மார்க்சிய ரஷிய சமூக ஜனநாயக தொழிற்கட்சியில் இருந்து பிரிந்து ரஷிய சமூக ஜனநாயக தொழிற்கட்சி (போல்செவிக்ஸ்) எனும் கட்சியைத் தொடங்கினார். இது மக்களால் போல்செவிக் கட்சி என அழைக்கப்பட்டது. தொழிலாளர் நலன்களுக்காகச் செயல்படக் கூடிய கட்சி போல்செவிக் கட்சிதான் என்று மக்களை உணரவைத்தார். ஆட்சிக்கு எதிரான தொழிலாளிகளின் புரட்சிக்குப்பிறகு கெரன்ஸ்சியின் அரசு கலைக்கப்பட்டு லெனின் அப்பதவியில் அமர்ந்தார்.
1952ஆம் ஆண்டில், 19ஆம் கட்சிக் கூட்டத்தில் ஸ்டாலினின் பரிந்துரைப்படி, போல்செவிக் கட்சி சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிசக் கட்சி எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads