போளுதிம்மராயன் துர்க்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
போளுதிம்மராயன் துர்க்கம் அல்லது போளு மலை என்பது ஒரு மலைக்கோட்டை. இம்மலையின் உயரம் 3389 அடி. இது காவேரிப்பட்டணம்- சாபர்த்தி செல்லும் நெடுஞ்சாலையில் சாபர்த்தியிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இம்மலை செடி கொடிகளின்றி ஒரே பாறையாக நான்கு புறங்களிலும் செங்குத்தாக அரைச்சந்திரன் வடிவமாக அமைந்துள்ளது. மலை உச்சியில் சிறந்த அரண்களுடன் அமைக்கப்பட்டுள்ளது இம்மலைக்கோட்டை. இம்மலையில் மூன்று நான்கு சுணைகளும், திம்மராய சுவாமி கோயிலும் உள்ளன. இக்கோட்டை ஐதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருக்கு ஆங்கிலேயருக்கு நடைபெற்ற போர்களில் பெரும் பங்கு வகித்தது. மலையடிவாரத்தில் வீரர்கள் தங்கியிருந்த இடம் கொத்தளம் என்ற பெயரில் மலையின் மேற்குப் பகுதியில் உள்ளது. கிருட்டிணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளில் இது ஒன்றாகும்.[1]


Remove ads
படக்காட்சியகம்
- போளுதிம்மராயன் துர்கம் மலைக்கோட்டையின் ஒரு பகுதி
- போளுதிம்மராயன் மலைக்கோட்டை மதில்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads