மகன்றில் பறவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகன்றில் King penguin என்பது ஒரு வகை நீர்ப்பறவை.
உருவம்
- இந்தப் பறவை பறவை அன்றில் பறவை போல் இணைபிரியாமல் வாழும் பாங்கினை உடையது. இதற்கு நீண்ட சிறகும், குறுகிய கால்களும் உண்டு. [1]
மகன்றில் புணர்ச்சி
- மகன்றில் பறவை நீரில் வாழும். ஆணும் பெண்ணும் இணைந்தே வாழும். 'பூ' என்னும் ஒலிக்குறி அற்பமான ஒன்றைக் குறிக்கப் பயன்படுத்தப்படும். பூ என்பது பூ என்னும் எழுத்து ஒலிக்கும் இரண்டு மாத்திரைக் கால அளவு. தலைவன் தன்னைத் தழுவும்போது பூ(அற்ப) அளவுக்கால இடைவெளி தோன்றினாலும் அதனை ஓராண்டு இடைவெளி போலத் தலைவி கருதுவாளாம். இப்படித் தழுவுவதுதான் மகன்றில் போன்ற புணர்ச்சியாம். [2]
மகன்றில் இணைந்தே பறக்கும்
- திருபரங்குன்றம் சென்ற அடியார்கள் மகன்றில் பறவை போல மைந்தரும் மகளிரும் இணை பிரியாது சென்று முருகனை வழிபட்டனாம்.[3]
- துணையைப் பிரிந்த மகன்றில் போல விசயை தன் கணவனைப் பிரிந்து பிணக்காட்டில் கிடந்தாள் என்று சீவகசிந்தாமணி குறிப்பிடுகிறது. [4]
Remove ads
அடிக்குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads