மகபூபாபாத் மாவட்டம்
தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகபூபாபாத் மாவட்டம் (Mahabubabad district) இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2][3] துவக்கத்தில் 10 மாவட்டங்களைக் கொண்டிருந்த புதிய தெலுங்கானா மாநிலம், அக்டோபர், 2016-இல் மாவட்டங்களைப் பிரித்து மறுசீரமைக்கும் போது மேலும் 21 மாவட்டங்கள் புதிதாக நிறுவப்பட்டது. புதிய மாவட்டமான மகபூபாபாத் மாவட்டம், வாரங்கல் மாவட்டத்தின் பகுதியாக இருந்தது.[4] இம்மாவட்டத் தலைமையிடம் மகபூபாபாத் நகரத்தில் அமைந்துள்ளது.


Remove ads
புவியியல்
மகபூபாபாத் மாவட்டம் 2,876.70 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.[5]
மக்கள் தொகையியல்
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மெகபூபாத் மாவட்டத்தின் மக்கள் தொகை 7,70,170 ஆகும்.[5]
மாவட்ட நிர்வாகம்
மெகபூபாபாத் மாவட்டம், மெகபூபாபாத் மற்றும் தோரூர் என இரண்டு வருவாய்க் கோட்டங்களையும், 12 மண்டல்களையும் கொண்டுள்ளது.[6]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads