மகரந்தக்காவி

From Wikipedia, the free encyclopedia

மகரந்தக்காவி
Remove ads

மகரந்தக்காவி (pollinator) என்பது ஒரு பூவின் ஆண் மகரந்தக்கூட்டில் இருந்து, இன்னொரு பூவின் சூல்மூடிக்குக் காவிச் செல்லும் ஒரு உயிரியைக் குறிக்கும். இதன் மூலம், மகரந்த மணிகளினால், பெண் பாலணுக்கள் கருவுறுவதற்கு இவை உதவுகின்றன.

Thumb
ஈ வகையைச் சேர்ந்த ஒரு மகரந்தக்காவி மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது

பின்னணி

எவ்வகையான மகரந்தக்காவிகளைத் தம்பால் ஈர்க்கின்றன என்பதைப் பொறுத்துத் தாவரங்கள் வெவ்வேறு மகரந்தச்சேர்க்கை அறிகுறி வகைகளுள் அடங்குகின்றன. இவ்வறிகுறிகள் பொதுவாக, பூவின் அளவு, அல்லிவட்டத்தின் ஆழமும் அகலமும், நிறம், மணம், தேனின் அளவு, தேனின் சேர்மானம் போன்ற இயல்புகள் ஆகும். எடுத்துக்காட்டாக, பறவைகள், நீண்ட ஒடுக்கமான குழாய்களாக அமைந்த செந்நிறமும், மிகுதியான தேனையும் கொண்ட பூக்களினால் கவரப்படுகின்றன. ஆனால், இவை அகலமானவையும், குறைவான தேனையும், மிகுதியான மகரந்தத்தையும் கொண்ட பூக்களினால் கவரப்படுவதில்லை. இத்தகைய பூக்கள் வண்டுகளைக் கவர்கின்றன. இவ்வாறான இயல்புகளை சோதனைக்காக மாற்றும்போது மகரந்தக்காவிகளின் வருகை குறையலாம்.

Remove ads

மகரந்தக்காவி வகைகள்

Thumb
பூக்களில் மகரந்தச் சேர்க்கை புரியும் ஒருவகை அந்தோபிலா
Thumb
உடலில் மகரந்த மணிகள் ஒட்டியபடி பூவில் இருக்கும் ஒரு தேனீ

அந்தோபிலாக்கள்

அந்தோபிலா வகையைச் சேர்ந்த பல இனங்கள் மகரந்தக்காவிகளாகச் செயற்படுகின்றன. இவை இதற்காகச் சிறப்பாக்கம் பெற்றுள்ளன.

தேனீக்கள்

தேனீக்கள் ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்குச் சென்று தேனையும், மகரந்த மணிகளையும் சேகரிக்கின்றன. மகரந்தக் கூடுகளில் உரசுவதன் மூலம் இவை மகரந்தமணிகளைச் சேகரிக்கின்றன. மகரந்தம் இவற்றின் பின் கால்களில் காணப்படும் மகரந்தக் கூடை என்னும் அமைப்பினுள் சேர்கின்றது. தேனீக்கள் ஒவ்வொரு பூவாகச் செல்வதால் ஒரு பூவில் இருந்து சேகரிக்கப்படும் மகரந்த மணிகள் இன்னொரு பூவின் சூல்மூடிகளைச் சென்றடைகின்றன.

பிற பூச்சிகள்

பட்டாம்பூச்சி, அந்துப்பூச்சி என்பவற்றை உள்ளடக்கிய லெபிடோப்டெராக்கள் குறைந்த அளவில் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன. இவை உணவுப் பயிர்களுக்கான முக்கிய மகரந்தக்காவிகள் அல்ல. ஆனால், பலவகை அந்துப்பூச்சிகள், காட்டுப்பூக்களிலும், புகையிலை போன்ற சில வணிகத் தாவரங்களிலும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. இவை தவிர குளவிகள், வண்டுகள் என்பனவும், சில சமயங்களில் எறும்புகளும்கூட மகரந்தக் காவிகளாகச் செயல்படுகின்றன.

முதுகுநாணிகள்

வௌவால்கள் சில வெப்பவலயப் பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கு உதவுகின்றன. இவற்றுடன் பல்வேறு பறவைகளும் மகரந்தக் காவிகளாகத் தொழிற்படுகின்றன. இவற்றுடன், குரங்குகள், லெமூர்கள், ஊர்வன, பல்லிகள் போன்ற முதுகுநாணிகளும் மகரந்தச்சேர்க்கைக்கு ஓரளவு உதவுகின்றன.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads