மகரப் பிரகரணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகரப் பிரகரணம் என்பது மறைந்துபோன இலக்கண நூல்களில் ஒன்று. யாப்பருங்கலம் என்னும் நூலுக்கு விருத்தி உரை எழுதும் குணசாகரர் இந்த நூலை மேற்கோள் காட்டி அந்த நூலிலிருந்து இரண்டு பாடல்களையும் தந்துள்ளார். [1] தந்துள்ள பாடல்களையும் நூலின் தலைப்பையும் நோக்கும்போது இது மகரக்குறுக்கம் பற்றிச் சொல்லும் நூல் எனத் தெரிகிறது.
ஆய்தமும் ஒற்றாய் அடங்கினும் ஆங்கதனை
ஓதினார் தொன்னூல் உணர்வுடையோர் - நிதியால்
ஒற்றாய் அடங்கினும் உன்கால வேற்றுமையால்
சொற்றாய் மகரச் சுருக்கு.
மெய் என்ற சொல்லானே மிக்க மகரத்தினையும்
நையும் அடங்கும் நனி என்னின் - ஐ என்பது
ஆவி என அடங்கும் அஃகிற்று எனில் மகரத்
தேய்விற்கும் அஃதே திறம்.
Remove ads
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads