மகளிர், குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறை, மேற்கு வங்காளம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகளிர், குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறை, மேற்கு வங்காளம் என்பது மேற்கு வங்காள அரசின் துறைகளில் ஒன்றாகும். அம்மாநிலத்தின் பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூக நலன் மேம்பாட்டிற்கும் அதன் திட்டங்களுக்கும் இத்துறையே பொறுப்பாகும்.[1]

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், ஆட்சி எல்லை ...

பாலினம், வயது, இயலாமை அல்லது சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட அல்லது வளர்ச்சியிலிருந்து விலக்கப்பட்ட மக்களை பாதுகாத்தல், சமத்துவம் மற்றும் உள்ளடக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு இத்துறை இயங்குகிறது.

Remove ads

அமைச்சர்கள் பட்டியல்

  • சபித்ரி மித்ரா
  • சசி பஞ்சா

அறிமுகம்

மேற்கு வங்காள மாநிலத்தில் நிலவும் வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கும், அம்மாநிலத்தில் நிலையான மற்றும் சமமான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் மேற்கு வங்காள அரசாங்கத்தின் பரந்த மூலோபாயத்தில் இந்த பெண்கள் மேம்பாடு மற்றும் சமூக நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. வறுமை, கல்வியறிவின்மை மற்றும் வளங்களுக்கான சமமற்ற அணுகல் ஆகியவை அம்மாநிலத்தில் நிலவிவரும் தற்கால பிரச்சனைகளாகும். விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு - குழந்தைகள் மற்றும் மிகவும் வயதானவர்கள், சமூகம் அல்லது குடும்ப ஆதரவு இல்லாமல் சமூகத்தின் விளிம்புகளில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், வீடற்ற நபர்கள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்வர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை வழங்கவும் இத்துறை உறுதிபூண்டுள்ளது.

Remove ads

துறை கட்டுப்பாடு மற்றும் பிரிவுகள்

இயக்குநரகம் மற்றும் இதர பிரிவுகள்

  • சமூக நல இயக்குநரகம்
  • குழந்தைகள் உரிமைகள் மற்றும் கடத்தல் இயக்குநரகம்
  • ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் இயக்குநரகம்
  • மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையம்
  • மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
  • மாநில மகளிர் ஆணையம்
  • வேக்ரன்சிக்கான கட்டுப்பாட்டாளர் அலுவலகம்
  • மேற்கு வங்க சமூக நல வாரியம்
  • மேற்கு வங்க திருநங்கைகள் மேம்பாட்டு வாரியம்
  • மேற்கு வங்க பெண்கள் மேம்பாட்டு நிறுவனம்
  • பெண்களுக்கான மாநில வள மையம்
  • மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்
  • மேற்கு வங்க பணிக்குழு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் RRRI
  • கன்யாஸ்ரீ பிரகல்பா

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads