மகாபாரத வசன காவியம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகாபாரத வசன காவியம் என்பது மகாபாரத பிரசங்கியான த. சண்முக கவிராயரால் உரைநடையில் எழுதப்பட்டதாகும்.[1] இது நல்லாப்பிள்ளை பாரத்ததை மூல நூலாக கொண்டு எழுதப்பட்டு, 1860 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. மகாபாரத்தைப் பொது மக்களிடம் எளிமையாகக் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் இதை சண்முகக் கவிராயர் இயற்றியுள்ளார் எனப்படுகிறது. மகாபாரத வசன காவியமானது எதிரில் அமர்ந்திருப்பவருடன் உரையாடும் தொனியில் எழுதப்பட்டுள்ளது, அதாவது பிரசங்க நடையில் எழுதப்பட்டுள்ளது. இது ஐந்து தொகுதிகளில் 3,200 பக்கங்கள் கொண்டதாக உள்ளது.[2] 1860 - 1969 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இது 20 பதிப்புகளைக் கண்டுள்ளதை நோக்கும்போது, அக்காலத்தில் இது பரவலாகப் பயன்படுத்தபட்டதை அறியலாம்.

இதன் முதல் பதிப்பு நூலை (1860) ஆதாரமாகக் கொண்டு இரா. சீனிவாசன், த. குணாநிதி ஆகியோர் பதிப்பில், பரிசல் புத்தக நிலையத்தால் 2023 ஆம் ஆண்டு செம்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads