மகாலட்சுமி ஐயர்
தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாலட்சுமி ஐயர் (Mahalakshmi Iyer) இந்தி மற்றும் தமிழ் பாடல்கள் பாடும் ஓர் இந்திய பின்னணிப் பாடகர் ஆவார். தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஒடியா, குஜராத்தி, அசாமி மற்றும் கன்னடம் போன்ற பல இந்திய மொழிகளிலும் இவர் பாடியுள்ளார்.[1]
Remove ads
தொழில்
இவர், 1996 இல் சங்கர்-எசான்-லாய் இசை இயக்குநராக அறிமுகமான "தஸ்" (1997) என்ற படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தின் இயக்குநர் திடீரென காலமானதால் படம் முடிவடையவில்லை. இருப்பினும் படத்தின் பாடல்களின் ஆல்பம் 1999 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதே வாரம் இவர் உதித் நாராயணுடன் "தஸ்"யும் பாடினார். இது பின்னணிப் பாடகியாக இவரது முதல் வெளியீடாக இருந்தது. மகாலட்சுமி, சங்கர்-எசான்-லோய் மற்றும் ஏ. ஆர். ரகுமான் ஆகியோரது தொடர்ந்து வந்த பல படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார்.[2]
பின்னர் இவர் பல ஜிங்கில்கள் மற்றும் அசல் ஆல்பங்களை பாடியுள்ளார்.[3] "மிஷன் காஷ்மீர்" , "யாதீன்"(2001) மற்றும் "சாத்தியா" போன்ற பல வெற்றிகரமான பாடல்களில் பாடினார். ஏ. ஆர். ரகுமான், சங்கர்-எசான்-லோய், விசால்-சேகர், தின்-லலித் போன்ற பல மிகப்பெரிய இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். "யாஷ் ராஜ் பிலிம்ஸ்" தயாரிப்பில், தூம் 2, "பன்டி அவுர் பாபி", "சலாம் நமஸ்தே", "ஃபனா", "த ரா ரம் பம்" மற்றும் "ஜூம் பராபர் ஜூம்" போன்ற பல படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.
"சூர் - தி மெலடி ஆஃப் லைஃப்" (2002), "கபி சாம் தாலே" "ஹார் தராப்" (ரிஸ்தே) (2002) , "சுப் சுப் கே" (பன்டி அவு பாப்லி) (2005), ஆஜ் கி ராத்" (டான்: த சேஸ் பிகன்ஸ் அகெய்ன்)(2006) மற்றும் " போல் நா ஹல்கே ஹல்கே" ( ஜூம் பார்பர் ஜூம்) போன்ற படங்களில் இவரது பாடல்கள் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.[4] ஏ. ஆர். ரகுமான் இசையில் வெளியான சிலம்டாக் மில்லியனயர் படத்தில் இடம் பெற்று சிறந்த பாடலுக்கான அகாடமி விருது பெற்ற "ஜெய் ஹோ" என்ற பாடலை பாடினார். குறிப்பாக, பாட்டு மற்றும் வசனங்களைக் கொண்ட உருதுப் பகுதியைப் பாடினார். (அவற்றில் பெரும்பாலானவை சுக்விந்தர் சிங் பாடியது). [5]
Remove ads
சொந்த வாழ்க்கை
மகாலட்சுமி ஒரு தமிழ் இசைக் குடும்பத்திச் சேர்ந்தவர். இவரது தாயார் பாரம்பரிய கர்னாடக இசைப் பாடகர் ஆவார். கல்பனா, பத்மினி மற்றும் சோபா என்ற மூன்று சகோதரிகளும் இவரைப் போலவே இந்துஸ்தானி இசையைக் கற்றுக் கொண்டனர். இவர் மும்பையின் செம்பூர் பகுதியில் வளர்ந்தார். மும்பை ஆர். ஏ. போடர் கல்லூரியில் பொருளாதாரம் பட்டம் பெற்றார்.
விருதுகள்
- ஆதார் என்ற படத்திற்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான ஆல்பா விருது
- " சுனா எட்டி காராத் " படத்திற்காக மகாராட்டிரா கலா நிகேதன் விருது
- "ரஜினி முருகன் படத்தில் "உன் மேல ஒரு கண்ணு" பாடலுக்காக 2016இல், 64வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த பெண் பின்னணிப் பாடகி – தமிழ் பாடகிக்கான மகாராட்டிரா மாநில விருதினைப் பெற்றார்.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads