மகாவலி ஆறு

இலங்கையிலுள்ள ஆறு From Wikipedia, the free encyclopedia

மகாவலி ஆறு
Remove ads

மகாவலி ஆறு அல்லது மகாவலி கங்கை இலங்கையில் உள்ள ஆறாகும். இது பீதுறுதாலகாலிருந்து ஊற்றெடுத்து திருகோணமலையில் கடலில் சேர்கின்றது. இது இலங்கையின் மிக நீளமான ஆறாகும், மேலும் நீரோட்டத்தின் படி முதலாவது பெரிய ஆறும் ஆகும். இந்த ஆற்று நீரைப் பயன்படுத்தி வேளாண்மையும் நீர்மின் உற்பத்தியும் பெருமளவில் நடைபெறுகிறது. சுமார் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலம் இவ்வாற்று நீரின் மூலம் பயிரிடப்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. மகாவலி கங்கை என்பது சிங்கள மொழியில் மணற்பாங்கான பெரும் ஆறு எனப் பொருள் தரும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 22282 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 40 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 10237 சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் முதலாவது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[2][3][4]

விரைவான உண்மைகள் மகாவலி ஆறு Mahaweli River, அமைவு ...

இலங்கையின் முக்கிய நீர்மின் திட்டங்கள் மகாவலியை மறித்துக் கட்டப்பட்ட அணைகள் மூலமே செயற்படுத்தப்படுகின்றன. இவற்றில் முக்கிய நீர்மின் திட்டங்கள்:

  • மேல் கொத்மலை நீர்மின் திட்டம்
  • கொத்மலை நீர் மின் திட்டம்
  • உக்குவளை நீர்மின் திட்டம்
  • விக்டோரியா நீர் மின் திட்டம்
  • இரந்தெனிகலை நீர்மின் திட்டம்
  • இரந்தம்பை நீர்மின் திட்டம்
  • போவதன்னை நீர்மின் திட்டம்
  • உக்குவளை நீர்மின் திட்டம்

இவற்றுக்கு மேலதிகமாக பல நீர்பாசனத் திட்டங்களும் இவ்வாற்றில் அமைக்கப்பட்டுள்ளன. அவை:

  • மினிப்பே
  • பொல்கொல்லை
  • உல்கிட்டிய/ரக்கிந்தை
  • மாதுரு ஓயா
Remove ads

மேலும் பார்க்க

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads