மகிழ்வின்றிய கோளாறு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாரிய மனச்சோர்வை விட குறைந்த வலிமையுடன் அதிக காலம் நிலைத்திருக்கும் மற்றொரு நிலை மகிழ்வின்றிய கோளாறு (Dysthymia) என அழைக்கப்கடும். Dys என்றால் சந்தோஷமற்ற நிலை, Thymas என்றால் ஆத்மா. மகிழ்வின்றிய கோளாறினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வாழ்வின் எந்த விடயத்திலும் அக்கறை இன்றி இருப்பதோடு வாழ்வின் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாதவாகராகவும் இருப்பார். ஏனைய மனச்சோர்வு குணக்குறிகளும் இவர்களுக்கு சிறிய அளவில் இருக்கும்.

களைப்பு, விடையங்களை மறையாகப்பார்க்கும் தன்மை, குறைந்த சுயகணிப்பு, பதகளிப்பு, அதிகாலை நேர நித்தரை குழப்பம், குற்ற உணர்வு, உறுத்தலுணர்வு ஆகிய குணக்குறிகளில் சிலவோ அல்லது பலவோ காணப்படலாம். ஆயினும் பல மகிழ்வின்றிய கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பது போலத் தோன்றும். அவர்கள் தமது குடும்பத்துடன் இருப்பதோடு வேலைக்கும் சென்று வரலாம். அவர்களிடம் பெரிய வித்தியாசங்கள் எதையும் காணாமல் இருக்கலாம். மிக நீண்ட காலமாக இந்த மகிழ்வின்றிய கோளாறு நோய் என்பது “தைமஸ் சுரப்பியுடன் தொடர்புடைய ஒரு பிரச்சினை என்றே கருதப்படுகின்றது.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads