மக்கெடோனின் நான்காம் அமிண்டாஸ்
மக்கெடோனியாவின் மன்னர் (கிமு சு.365 -கிமு 335 ) From Wikipedia, the free encyclopedia
Remove ads
நான்காம் அமிண்டாஸ் (Amyntas IV of Macedon, கிரேக்கம் : Ἀμύντας Δ΄) என்பவர் கிமு 359 இல் கிரேக்க இராச்சியமான மக்கெடோனியாவின் பட்டத்து அரசர் ஆவார். இவர் அர்கெட் வம்சத்தைச் சேர்ந்தவர்.[5]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
அமிண்டாஸ் மாசிடோனின் மன்னர் மூன்றாம் பெர்டிக்காஸின் மகன் ஆவார். இவர் கிமு 365 இல் பிறந்தவர்.[6]
கிமு 359 இல் இவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு இவர் அரசரானார். இவர் சிறுவனாக இருந்ததால் பெர்டிக்காசின் உறவினரான மக்கெடோனின் இரண்டாம் பிலிப் இவரது அரசப் பிரதிநிதியாக இருந்து இவர் சார்பாக ஆட்சி செய்தார். அதே ஆண்டில், பிலிப் இவரது பதவியைப் பறித்துக் கொண்டு தன்னையே மாசிடோனியாவின் அரசனாக அறிவித்துக் கொண்டார்.
அமிண்டாஸ் பிலிப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதப்படவில்லை. எனவே அவர் தனது மகளான சைனானை இவருக்கு திருமணம் செய்து வைத்தார். கிமு 336 இல் அலெக்சாந்தர் வாரிசு விசயத்துக்காக உடனடியாக அமிண்டாசை கொன்றார்.
மக்கெடோனின் இரண்டாம் யூரிடைஸ் அமிண்டாசின் மகளாவார்.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads