மக்னீசியம் அசிட்டேட்டு

From Wikipedia, the free encyclopedia

மக்னீசியம் அசிட்டேட்டு
Remove ads

மக்னீசியம் அசிட்டேட்டு (Magnesium acetate) என்பது Mg(C2H3O2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இம்மூலக்கூற்று வாய்ப்பாடு நீரிலி வடிவ மக்னீசியம் அசிட்டேட்டைக் குறிக்கிறது. நீரேற்று வடிவமானது மக்னீசியம் அசிட்டேட் நான்குநீரேற்று Mg(CH3COO)2 • 4H2O. என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. அசிட்டிக் அமிலத்தின் மக்னீசியம் உப்பாகக் கருதப்படும் இச்சேர்மத்தில் மக்னீசியம் 2+ என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது [1]. நீருறிஞ்சும் தன்மை கொண்ட மக்னீசியம் அசிட்டேட்டு சூடுபடுத்தினால் மக்னீசியம் ஆக்சைடாகச் சிதைவடைகிறது [2]. பொதுவாக உயிரியல் வினைகளில் மக்னீசியத்தை வழங்கும் மூலமாக மக்னீசியம் அசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது [3].

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

இயற்பியல் பண்புகள்

மக்னீசியம் அசிட்டேட்டு வெண்மை நிறத்துடன் நீருறிஞ்சும் படிகங்களாகத் தோற்றமளிக்கிறது. முகரும் போது அசிட்டிக் அமிலத்தின் மணத்துடனும் நீரில் கரையக்கூடியதாகவும் உள்ளது. நீரிய கரைசலாக இருக்கும் போது மக்னீசியம் அசிட்டேட்டின் pH நடுநிலையின் விளிம்பில் காரத்தின் பக்கம் இருக்கிறது[4][5].

சேமிப்பு

இது மிகத்தீவிர நீருறிஞ்சி என்பதால் தண்ணீரிலிருந்து விலக்கி வைத்து சேகரிக்கப்பட வேண்டும். மேலும் இது வலுவான ஆக்சிசனேற்றிகளுடன் சேர்த்து வைக்கவும் பொருத்தமற்றதாகக் கருதப்படுகிறது. அதனால் அவற்றுடனும் கலக்கப்படாமல் இதைத் தனித்துச் சேகரிக்க வேண்டும்[6].

தயாரிப்பு

மக்னீசியம் ஐதராக்சைடும் அசிட்டிக் அமிலமும் வினைபுரிவதால் மக்னீசியம் அசிட்டேட்டு உருவாகிறது [7]

2 CH3COOH + Mg(OH)2 → (CH3COO)2Mg + 2 H2O

20 சதவிகிதம் அசிட்டிக் அமில கரைசல் கொண்ட காய்ச்சி வடிகட்டிய தண்ணீரில் மக்னீசியம் கார்பனேட்டு தொங்கலாக நிற்கிறது [8]

2 CH3COOH + MgCO3 → Mg(CH3COO)2 + CO2 + H2O.

உலர் பென்சீனில் கரைந்திருக்கும் அசிட்டிக் அமிலத்துடன் தனிமநிலை மக்னீசியம் வினைபுரியும்போது மக்னீசியம் அசிட்டேட்டு ஒரு வாயுவின் வெளியேற்றத்துடன் உருவாகிறது. பெரும்பாலும் இவ்வாயு ஐதரசன் வாயுவாக இருக்கும் [9]

Mg +2 CH3COOH → Mg(CH3COO)2 + H2

பயன்கள்

1881 ஆம் ஆண்டில் சார்லசு கிளாமண்டு கிளாமண்டு கூடை ஒன்றை கண்டுபிடித்தார், இது முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பயனுள்ள வாயுக்கூடைகளில் ஒன்றாகும். இந்த கண்டுபிடிப்பில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களில் மக்னீசியம் அசிடேட்டு, மக்னீசியம் ஐதராக்சைடு மற்றும் நீர் ஆகியவை உள்ளடங்கும்.

மக்னீசியம் அசிடேட்டு பொதுவாக மக்னீசிய மூலமாக அல்லது வேதியியல் பரிசோதனைகளில் அசிட்டேட்டு அயனியாகப் பயன்படுத்தப்படுகிறது. மக்னீசியம் அசிடேட்டு மற்றும் மக்னீசியம் நைட்ரேட்டு இரண்டையும் மூலக்கூற்று இயக்கவியல் தூண்டுதல்கள் மற்றும் பரப்பு இழுவிசை அளவீடுகள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்துதால் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும். இப்பரிசோதனையில் மேற்பரப்பிற்கான நைட்ரேட்டு அயனிடன் ஒப்பிடுகையில் அசிட்டேட்டு அயனி வலுவான உறவைக் கொண்டிருந்ததாகவும் மற்றும் காற்று / திரவ இடைமுகத்திலிருந்து Mg2 + அயனி வலுவாக விலகி விடுவதாகவும் சோதனையை நிகழ்த்தியவர்கள் கண்டறிந்தனர். மேலும், நைட்ரேட்டு அயனிடன் ஒப்பிடுகையில் அசிட்டேட்டு அயனியுடன் மக்னீசியம் அயனி அதிக ஈர்ப்புடன் பிணைய முயல்வதையும் அவர்கள் கண்டறிந்தனர் [10].

மெக்னீசியம் அசிடேட் மிகவும் பிரபலமான பயன்பாடுகளில் ஒன்று கால்சியம் மக்னீசியம் அசிடேட்டு (சி.எம்.ஏ) என்று அழைக்கப்படும் கலவையின் பயன்பாடு ஆகும். இது கால்சியம் அசிட்டேட்டு மற்றும் மெக்னீசியம் அசிடேட்டு ஆகியவற்றின் கலவையாகும். NaCl மற்றும் CaCl2 சேர்மங்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு அபாயமில்லாத சேர்மமாகக் இது கருதப்படுகிறது. சக்திவாய்ந்த SO2, NOx வாயுக்களுக்கு மாற்றாகவும் கால்சியம் மக்னீசியம் அசிட்டேட்டு பயன்படுகிறது. மற்றும் நிலக்கரி எரிப்பு முறைகளில் நச்சு துகள்களின் உமிழ்வை கட்டுப்படுத்த்தும் முகவராகவும் அமில மழைகளை குறைக்கிறது[11]. . பிரைமேசு நொதியில் இணக்கமான மாற்றத்தை மக்னீசியம் அசிட்டேட்டு தோற்றுவிப்பதாக அறியப்படுகிறது. இச்சோதனையில் Mg(OAc)2, MnCl2, CaCl2, NaOAc, LiCl, MgSO4 மற்றும் MgCl2 ஆகிய அனைத்து சேர்மங்களும் பயன்படுத்தப்பட்டு ஒப்பிடப்பட்டன. மற்ற சேர்மங்களைக் காட்டிலும் பிரைமேசு நொதியுடன் மக்னீசியம் அசிட்டேட்டு மிகச்சிறந்த இணக்கத்தைக் கொண்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது [12].

மக்னீசியம் அசிட்டேட்டை ஐதரசன் பெராக்சைடுடன் சேர்த்து பயன்படுத்தினால் இக்கலவை ஒரு பாக்டீரியா கொல்லியாகச் செயல்படுகிறது[13]. கரிமச் சேர்மங்களை சாம்பலாக்கி அதில் அதிக அல்லது குறைந்த அளவு இடம்பெறுள்ள புளோரினை பகுப்பாய்வு செய்யும் செயல்முறையில் மக்னீசியம் அசிட்டேட்டு மிக்க பயன் தருவதாக உள்ளது[14].

Remove ads

பாதுகாப்பு

மக்னீசியம் அசிடேட்டு பயன்படுத்துவதற்கு ஒரு பாதுகாப்பான சேர்மமாகும். சுழியம் என்ற எண்மதிப்பை உடல்நல அபாய மதிப்பீட்டு எண்ணாக இதற்கு வழங்கியுள்ளார்கள். இருப்பினும் மம்னீசியம் அசிட்டேட்டைப் பயன்படுத்தும்போது எப்போதும் கையுறைகளும் பாதுகாப்பு கண்ணாடிகளும் அணிவது அவசியம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. கண், தோல், உணவுப்பாதை உறுப்புகள், நுரையீரல் போன்ற உறுப்புகளில் படநேர்ந்தால் அப்பகுதிகளில் எரிச்சலும் தீங்கும் உண்டாகும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads