மக்னீசியம் புரோமைடு

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

மக்னீசியம் புரோமைடு
Remove ads

மக்னீசியம் புரோமைடு (Magnesium bromide) என்பது MgBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மக்னீசியமும் புரோமினும் சேர்ந்து வெண்மை நிறத்தில் ஈரமுறிஞ்சும் சேர்மமாக இது உருவாகிறது. மிதமான மயக்க மருந்தாகவும் வலிப்புத் தடுப்பு மருந்தாகவும் நரம்பியல் கோளாறு சிகிச்சைகளில் மக்னீசியம் புரோமைடு பயன்படுத்தப்படுகிறது [2]. நீரில் நன்றாகவும் ஆல்ககாலில் சிறிதளவும் இச்சேர்மம் கரைகிறது. சாக்கடல் போன்ற கடல் நீரிலும் பிசுகோபைட்டு, கார்னலைட்டு போன்ற கனிமங்களிலும் இது இயற்கையில் சிறிதளவு காணப்படுகிறது [3][4].மக்னீசியம் புரோமைடு மீத்தூய நிலையில் தூளாகவும் நீரேற்று மற்றும் நீரிலி வடிவங்களில் கிடைக்கிறது. நீர் சுத்திகரிப்பு, வேதிப் பகுப்பாய்வுகள், படிக வளர்ச்சி பயன்பாடுகளுக்காக இது பயன்படுத்தப்படுகிறது. 172.4 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடையும் என்றாலும் 711 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது உருகுகிறது.

விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
Remove ads

தயாரிப்பு

ஐதரோ புரோமிக் அமிலத்துடன் மக்னீசியம் ஆக்சைடை சேர்த்து வினைபுரியச் செய்தால் மக்னீசியம் புரோமைடு படிகமாவதன் மூலம் உற்பத்தியாகிறது [4]. மக்னீசியம் கார்பனேட்டுடன் ஐதரோபுரோமிக் அமிலம் வினை புரிவதாலும் மக்னீசியம் புரோமைடு உருவாகிறது. விளைபொருளை ஆவியாக்கியபின் கிடைக்கும் திண்மம் மக்னீசியம் புரோமைடு ஆகும் [3].

பயன்கள்

மக்னீசியம் புரோமைடு பல வேதியியல் வினைகளுக்கு ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. மருந்து உலகில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் டை ஐதரோ பிரிமிடோன்கள் தயாரிக்கும் கரைப்பான் இல்லாத ஒரு குடுவை தொகுப்பு வினைக்கு வினையூக்கியாகப் பயன்படுவது மக்னீசியம் புரோமைடின் முதலாவது முக்கியப் பயனாகும். இதயத் தமனி மற்றும் தசை செல்களுக்கு கால்சியம் கனிமத்தை செல்லவிடாமல் தடுக்கும் தடுப்பான்கள் மற்றும் எச்.ஐ.வி.ஜி.பி -120-சி.டி 4 தடுப்பான்கள் போன்ற மருந்துகளில் டை ஐதரோ பிரிமிடோன்கள் பயன்படுத்தப்படுகின்றன [5]. இது ஒரு நோயகற்றும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது [3]. CH 2 Cl 2 உடன் இணைந்து மக்னீசியம் புரோமைடு வினையூக்கும் வினையில் ஆல்க்கீன்களின் ஐதரசனேற்றம் மூலம் குறிப்பிட்ட சமச்சீர் மற்றும் சமச்சீரற்ற மையங்களை இச்சேர்மம் ஏற்படுத்துகிறது [6]. பிற வேதிவினை குழுக்களுடன் பிணைக்கப்படும்போது மக்னீசியம் புரோமைடு வினையூக்க வினைகளைத் தவிர வேறு நடைமுறை பயன்பாடுகள் சிலவற்றையும் காட்டுகிறது. ஓர் எத்தில் குழுவோடு பிணைக்கப்படும்போது, டிரைகிளிசரால்களின் தெரிவுசெய்யப்பட்ட சிறப்புப் பகுதி பகுப்பாய்விற்கு இது பயன்படுத்தப்படுகிறது [7]. மக்னீசியம் புரோமைடு அறுநீரேற்று ஒரு சுடர் தடுப்பு பொருளாக பயன்படுத்த ஆராயப்படுகிறது. லிட்டருக்கு 0.125 மோல் செறிவுள்ள மக்னீசியம் புரோமைடு அறுநீரேற்று ஒரு பருத்திவகை பொருளுடன் சேர்க்கப்பட்டு தீத்தடுப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது[8]. முதலாவது நிலைப்புத் தன்மை மிக்க மெக்னீசியம் சிலில்யீனாய்டை தயாரிக்க மக்னீசியம் புரோமைடு பயன்படுத்தப்பட்டது. ஒரு சிலில்யீனாய்டு என்பது R 2 SiM X ஐக் என்ற வாய்ப்பாட்டை கொண்ட ஒரு சேர்மம் ஆகும். இங்குள்ள M என்பது உலோகத்தையும் மற்றும் R என்பது ஒரு கரிம மையத்தையும் குறிக்கிறது. பாரம்பரியமாக இலித்தியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. மக்னீசியம் சிலில்யீனாய்டை மக்னீசியம் புரோமைடுடன் இலித்தியம் மெத்தில் புரோமோசிலில்யீனாய்டுடன் சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. மக்னீசியம் அணு அணைவுச் சேர்மத்திலுள்ள இலித்தியத்தை இடப்பெயர்ச்சி செய்து மாற்றியமைக்கிறது. இதனால் அதனுடன் புரோமைடு இணைக்கப்படுகிறது. ள்ளது. இந்த அணைவுச் சேர்மம் அறை வெப்பநிலையில் நிலையானதாகும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads