மக்னீசியம் பைகார்பனேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மக்னீசியம் பைகார்பனேட்டு (Magnesium bicarbonate) என்பது Mg(HCO3)2, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மக்னீசியம் ஐதரசன்கார்பனேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் மக்னீசியத்தின் பைகார்பனேட்டு வகை உப்பாகும். மக்னீசியம் ஐதராக்சைடும் (மக்னீசியம் பால்) நீர்த்த கார்போனிக் அமிலமும் (சோடா நீர்) வினைபுரிந்து மக்னீசியம் பைகார்பனேட்டு உருவாகிறது. மக்னீசியம் பைகார்பனேட்டு நீர்த்த கரைசலாகவே காணப்படுகிறது. இதனை உற்பத்தி செய்வதற்கு மக்னீசியம் ஐதராக்சைடின் தொங்கல் கரைசலை அழுத்த கார்பனீராக்சைடுடன் சேர்த்து சூடுபடுத்துவதால் மக்னீசியம் பைகார்பனேட்டு கரைசல் உருவாகிறது :[1]
- Mg(OH)2 + 2 CO2 → Mg(HCO3)2.
இதன் விளைவாக விளையும் கரைசலை உலர்த்துவதால் மெக்னீசியம் பைகார்பனேட் சிதைவடைந்து மெக்னீசியம் கார்பனேட்டும் கார்பன் டை ஆக்சைடும், நீரும் விளைகின்றன.
- Mg2+ + 2 HCO3− → MgCO3 + CO2 + H2O
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads