மங்கோலிய சிரில்லிக் எழுத்துக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மங்கோலிய சிரில்லிக் எழுத்துக்கள் (மொங்கோலியம்: Монгол Кирилл үсэг, மங்கோல் கிரில் உசேக் அல்லது Кирилл цагаан толгой, கிரில் த்சகான் டோல்கோய்) என்பவை தற்போது மங்கோலியாவில் பயன்படுத்தப்படும் எழுத்து முறையாகும். எனினும் சீனாவின் உள் மங்கோலியாவில் இன்னும் பாரம்பரிய மங்கோலிய எழுத்துமுறையே பயன்படுத்தப்படுகிறது.

வரலாறு
கடந்த சில காலகட்டங்களில் மொங்கோலிய மொழிக்குப் பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவங்களில் இதுவே கடைசியானதாகும். இது பல்கேரிய எழுத்துக்களை ஒத்துள்ளது. உருசிய எழுத்துமுறையை விட இதில் இரண்டு எழுத்துக்கள் மட்டுமே அதிகமாக உள்ளன.
இது 1940களில் சோவியத் செல்வாக்கின் கீழ் மங்கோலிய மக்கள் குடியரசில் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இதற்கு முன்னர் இலத்தீன் எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டது. 1990ல் மங்கோலியப் புரட்சிக்குப் பிறகு பாரம்பரிய மங்கோலிய எழுத்துமுறைக்கு மாற முயற்சிக்கப்பட்டது. எனினும் இந்த மாற்றம் நிகழவில்லை. எனினும் பாரம்பரிய மங்கோலிய எழுத்துமுறை ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டாயப்பாடமாக உள்ளது. மேலும் அது பிரபலமாகி வருகிறது.[2] மொங்கோலிய எழுத்துமுறை செங்குத்தாக எழுதப்படுகிறது. சீன எழுத்துமுறையை கிடைமட்டமாக கூட எழுதமுடியும். ஆனால் பாரம்பரிய மங்கோலிய எழுத்துமுறையை அவ்வாறு எழுத முடியாது. ஆதலால் சிரில்லிக் எழுத்துமுறையே நடைமுறைக்கு உகந்ததாக உள்ளது.
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads