மஞ்சக்குப்பம்

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மஞ்சக்குப்பம் இந்திய நகரான கடலூரின் மூன்று பெரிய பிரிவுகளுள் ஒன்று. பொன்னையார் நதி நகரம் வழியாக பாய்கிறது. நதிக்கரைக்கு அருகில் உள்ள பகுதி மஞ்சகுப்பம் என்று பெயரிடப்பட்டது. இது 17-ஆம் நூற்றாண்டின்போது மஞ்சள் குப்பம் என்று அறியப்பட்டது. அதிகாரப்பூர்வமாக அது இன்னும் மஞ்சகுப்பம் என்றே அறியப்படுகிறது. இருப்பினும் அண்மைய ஆண்டுகளில் மஞ்சைநகர் என்ற பெயர் மூலம் அறியப்படுகிறது.மஞ்சகுப்பத்தில் கடலூரின் முக்கிய அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைந்துள்ளன.

மஞ்சகுப்பம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம். 1680-இல் வெளியிடப்பட்ட சென்னை கசட்டேர்ஸ் "... தென்ஆற்காடு மாவட்டத்தில், அவர்கள் (டச்சு) தேவனாம்பட்டினம் கோட்டை உடைமையாக கொண்டிருந்தனர் மற்றும் மஞ்சகுப்பம் ஒரு குத்தகை நிலமாக அவர்கள் வசம் இருந்தது. 1690-இல் கோட்டை புனித டேவிட் வாங்கப்பட்டது ... " என்று குறிப்பிடுகிறது.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads