மஞ்சளாறு

இந்தியாவின் தமிழ்நாட்டில் பாயும் வைகை ஆற்றின் துணையாறு From Wikipedia, the free encyclopedia

Remove ads

மஞ்சளாறு அல்லது வத்தலகுண்டு ஆறு[1] என்பது தமிழ்நாட்டின், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓடும் வைகையின் ஒரு துணையாறு ஆகும். பழனி மலைகளில் உருவாகி கிழக்கு நோக்கிப் பாய்ந்து குன்னுவாரன்கோட்டை அருகே வைகையில் கலக்கிறது. மொத்தம் 470 ச.கி.மீ ஆற்றுப்படுகையும், 21.5553 ச.கி.மீ நீர்த்தேக்கப் பகுதியும் கொண்டுள்ளது.[2]

மஞ்சளாறு அணை

Thumb
மஞ்சளாறு அணை

இந்த ஆற்றின் குறுக்கே தேவதானப்பட்டி அருகே அமைந்துள்ள அணையாகும். நீர் மட்டம் 57 அடியாகும். மூலாறு, வறட்டாறு, தலையாறு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் மஞ்சளாறு அணைக்கு வந்து சேர்கிறது. அணையில் தேங்கும் நீர் மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், 10 மேற்பட்ட கண்மாய்களில் நீர் தேக்கப்பட்டு 5 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.[3] தேவதானப்பட்டி, செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.தும் மலப்பட்டி, கணவாய்ப் பட்டி, வத்தலக்குண்டு, கட்டகாமன்பட்டி, பழைய வத்தலக்குண்டு, கரட்டுப் பட்டி, குன்னுவாரன் கோட்டை ஆகிய ஊர்கள் இதன் பாசனப்பகுதிகளாகும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads