மடல் பாடிய மாதங்கீரனார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மடல் பாடிய மாதங்கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் இரண்டு உள்ளன. அவை: குறுந்தொகை 182, நற்றிணை 337 ஆகியவை.
இந்த இரண்டு பாடல்களிலும் மடலேறும் செய்தி வருகிறது. எனவே மாதங்கீரனார் என்னும் இந்தப் புலவருக்கு 'மடல் பாடிய' என்னும் அடைமொழி தரப்பட்டுள்ளது. இவர் பாடற்பொருளால் பெயர் பெற்ற புலவர்.
பெண்ணை விளையல் மா மடல்
நான் அனுப்பிய தூதுக்கு அந்த மெல்லியல் பேதை மசியவில்லை. எனவே பனை மரத்துக் கருக்கு மடல்களைப் பெரிய மாலையாகக் கட்டி மார்பில் அணிந்துகொண்டு பிறர் என்னைப் பார்த்து எள்ளி நகையாடும்படி அவள் பெயரைச் சொல்லிக்கொண்டே தெருவில் செல்வேன். ஊரார் கூட்டிவைப்பர் - தலைவன் கூற்று
- குறுந்தொகை 182
மடன்மா
கூந்தல் வளைத்துக்கொண்டுள்ள அவள் முகம் பாம்பு விழுங்கும் மதியம் போல உள்ளது. அவளைத் தர மறுப்பவர்களிடமிருந்து பெறுவதற்காக, மாலை சூட்டிக்கொண்டு மடல் மாவில் ஊர்ந்து செல்வேன். அவளது நாடு, ஊர், அழகுநலம் ஆகியவற்றைப் பாராட்டிக்கொண்டே செல்வேன். அவ்வாறு சென்று அவளைப் பெறாமல் வெறுமனே சாவேனா? - தலைவன் கூற்று.
- நற்றிணை 337
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads