மடல் (இலக்கியம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மடல், தமிழ் இலக்கிய வகைகளில்[1]ஒன்றான, சிற்றியலக்கியங்களில் ஒன்றாகும். மடலானது அகப்பொருள் சார்ந்த சிற்றிலக்கிய வகை ஆகும். இது காதல் குறித்த ஓர் இலக்கியம் ஆகும்.[2]

பெயர்க்காரணம்

இச்சிற்றிலக்கிய வகைக்கு எவ்வாறு மடல் எனப்பெயர் வந்தது எனில் தலைவன் தலைவியைக் காதலிக்கின்றான். எவ்வளவோ முயன்றும் தலைவனால் தலைவியை அடைய முடியவில்லை. எனவே தலைவன் தலைவியை அடைவதற்கு இறுதி முயற்சியாக மடல் ஏறத் துணிகின்றான். சில சமயங்களில் மடல் ஏறவும் செய்கின்றான். எனவே, தலைவன் தலைவியை அடைய மடல் ஏறுவதாகிய பாடு பொருளைக் கொண்ட இலக்கியம் ஆகையால் இதற்கு மடல் என்ற பெயர் ஏற்பட்டது.

Remove ads

விளக்கம்

பனைமரத்தின் கிளையால் குதிரை போன்ற உருவம் செய்வர். இதன் மேல் காதல் கொண்ட தலைவன் ஏறி அமர்ந்திருப்பான். உடல் முழுதும் திருநீற்றைப் பூசியிருக்கும் தலைவனுக்கு தோகை (பீலி), பூளைப்பூ, ஆவரம்பூ, எருக்கம் பூ ஆகிய பூக்களால் தொடுத்த மாலையை அணிவிப்பர். பின் கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வர். இதுவே மடல் ஏறுதல் எனப்படும்.

விளைவு

மடல் ஏறும் தலைவனின் துன்பத்தை தீர்க்க ஊர்க்காரர்கள், தலைவியிடம் தலைவனை சேர்க்க உதவுவார்கள். இதனால் தலைவன் தலைவியை அடைய வாய்ப்பு உள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads