மடிப்பிச்சை ஏந்துதல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மடிப்பிச்சை ஏந்துதல் என்பது இந்து சமயத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு சடங்காகும். இதனை மடிப்பிச்சை எடுத்தல் என்றும் கூறுவர். இந்தச் சடங்கினை மேற்கொள்ளும் பெண்கள் தங்கள் முந்தானையை கைகளால் தாங்கி பிச்சை எடுப்பதைப் போல ஏந்துகிறார்கள். மடிப்பிச்சை என்பது இரத்தலின் உச்ச நிலை ஆகும். இது இறைவனிடமோ அல்லது இறைவன் பெயரால் மனிதரிடமோ[1]மிகவும் இறைஞ்சிக் கேட்கப்படும் பிச்சை ஆகும். மடிப்பிச்சை கேட்டால் கண்டிப்பாகப் பிச்சை வழங்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.[2]
இவ்வாறு மடிப்பிச்சை ஏந்துதல், அவர்களுக்கான காரணங்களைப் பொருத்து மாறுபடுகிறது. இறைவனிடம் கோரிக்கை வைத்து மனமுருகி வேண்டும் போது, மடிப்பிச்சை ஏந்தி கண்களை மூடி வேண்டிக்கொள்கின்றார்கள். சிலர் கோவில்களிலேயே மடிப்பிச்சை ஏந்தி பக்தர்களிடம் பணம் பெறுகின்றார்கள். இவ்வாறு கோவில்களில் மடிப்பிச்சை ஏந்தி பெறப்படும் பணத்தினை தங்களுடைய குடும்ப சுப நிகழ்ச்சிக்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். வீடுதோறும் மடிப்பிச்சை ஏந்தும் பக்தர்கள், அரிசி உள்ளிட்ட பண்டங்களைப் பெற்று அதனைக் கொண்டு இறைவனுக்கு படைக்கின்றார்கள்.
Remove ads
கண்ணகி வழிபாட்டில் மடிப்பிச்சை
இலங்கை மட்டக்களப்பு பகுதியில் வழங்கிவரும் கண்ணகி வழிபாட்டில் பெண்கள் இந்த மடிப்பிச்சை ஏந்துதல் சடங்கினைச் செய்கிறார்கள். மடிப்பிச்சையாக பெறப்படும் பொருட்களைக் கொண்டு கூழுர்த்திப் பொங்கல் என்பதைச் செய்து இறைவிக்குப் படைக்கின்றார்கள். [3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads