மடு மரியாள் ஆலயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மடு அன்னை (Shrine of Our Lady of Madhu) கன்னி மேரியின் ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இது இலங்கையின் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் மடு என்ற இடத்தில் அமைந்துள்ளது. 400 ஆண்டுகள் பழமையான இத்தேவாலயம் இலங்கை தமிழ் மற்றும் சிங்கள கத்தோலிக்கரின் புனித வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது[1][2]. ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெறும் இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் இன, மத பேதமின்றி கலந்து கொள்வர்[3]. ஈழப்போர் தொடங்கியதில் இருந்து இவ்வாலயத்திற்கு செல்வோரின் தொகை பல மடங்கு குறைந்தது[1]. இனப்போரின் தாக்கத்தினால் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இவ்வாலயச் சுற்றுவட்டத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர். ஏப்ரல் 2008 இல் ஆலயத்தை நோக்கி இலங்கை இராணுவத்தினர் தொடர்ச்சியாக நடத்திய பலத்த எறிகணை வீச்சினால் ஆலயம் பலத்த சேதத்துக்குள்ளாகியது. இதனால் அங்கு அடைக்கலமடைந்திருந்ந்த மக்கள் அனைவரும் வேறு பாதுகாப்பான இடத்தை நோக்கி இடம்பெயர்ந்தனர். அந்த ஆலயத்தில் இறுதியாகத் தங்கியிருந்த குருக்கள் மற்றும் பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறினர்[4]. இதனை அடுத்து தேவாலயத்தில் 400 ஆண்டுகளாக அருள் பாலித்து வரும் அன்னையின் திருவுருவச் சிலையின் பாதுகாப்புக் கருதி அச்சிலை ஏப்ரல் 4, 2008 இல் மன்னார் தேவன்பிட்டி புனித சவேரியர் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது[5].
Remove ads
வரலாறு
மடு தேவாலயப் படுகொலைகள்
நவம்பர் 20, 1999 இல் மடு தேவாலயத்தை நோக்கி எறியப்பட்ட எறிகணை வீச்சினால் அங்கு தங்கியிருந்த 44 பொது மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 60 பேர் வரையில் படுகாயமடைந்தனர்[6].
இவற்றையும் பார்க்கவும்
- அன்னை வேளாங்கண்ணி
- இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads